டெல்லி 5-வது வெற்றி: மும்பை அணிக்கும் முன்னேற்றம்!

DC vs KKR and MI vs RR match Highlights in tamil: ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டங்ககளில் ராஜஸ்தானை வீழ்த்திய மும்பைக்கு 3-வது வெற்றியும், கொல்கத்தாவை தும்சம் செய்ய டெல்லிக்கு 5வது வெற்றியும் கிடைத்துள்ளன.

IPL 2021 Updates: DC vs KKR and MI vs RR Match Highlights

IPL 2021 Updates: ஐபிஎல் தொடருக்கான 24-வது லீக் ஆட்டம் நேற்று மாலை டெல்லியின் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களம் கண்டது ராஜஸ்தான் அணி. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

இந்த ஜோடியில் அதிரடி காட்டிய பட்லர் 41 ரன்களுடனும் (3 சிக்ஸர், 3 பவுண்டரி), ஜெய்ஸ்வால் 32 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சிவம் துபே அணிக்கு வலுவான ரன்களை சேர்க்க தனது பங்கிற்கு 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினார். மறுமுனையில் இருந்த கேப்டன் சஞ்சு 42 ரன்களுடன் 17.4 ஓவரில் ஆட்டமிழக்கவே, உடன் ஆடிய துபே 18.5 ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதி ஓவர்களில் களத்தில் இருந்த மில்லர், ரியான் பராக் ஜோடி தலா 1 பவுண்டரிகளை ஓடவிட்டனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 171 ரன்கள் சேர்த்தது.

பந்து வீச்சில் தொடர் தாக்குதலை தொடுத்த மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர்கள் போல்ட் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட்டை சாய்த்தனர்.

120 பந்துகளில் 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்த களம் கண்ட மும்பை அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா குயின்டன் டி கோக் ஜோடியில், 1 சிக்ஸரை பறக்க விட்டு 14 ரன்னில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. தொடர்ந்து களம் கண்ட சூர்யகுமார் யாதவ் 16 ரன்களுடனும், கிருனல் பாண்ட்யா 39 ரன்களுடனும் அவுட் ஆகி வெளியேறினர்.

தொடந்து களமிறங்கிய கீரோன் பொல்லார்ட் துவக்க வீரர் டி கோக்குடன் ஜோடி சேர்ந்து வெற்றியை உறுதி செய்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பாக ஆடிய டி கோக் 70 ரன்கள் (2 சிக்ஸர், 6 பவுண்டரி) சேர்த்தார். அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி ரன்கள் சேர்ப்பதில் சுணக்கம் காட்டாமல் நிர்ணயித்த இலக்கை 18.3 ஓவரிலே எட்டி பிடித்தது.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்து. அந்த அணியில் சிறப்பாக ஆடிய சுப்மான் கில் 43 ரன்களும், ரஸ்ஸல் 45 சேர்த்து ஆட்டமிழந்தனர். சிறப்பான துவக்கம் கிடைக்காத கேப்டன் மோர்கன் பூஜ்ய ரன்னில் வெளியேறினார்.

பின்னர் களம் கண்ட டெல்லி அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவே, முதல் விக்கெட்டுக்கே 132 ரன்கள் குவித்தது. அணிக்கு வலுவான அடித்த தளம் அமைத்த துவக்க வீரர்கள் பிருத்வி ஷா 82 ரன்களும் (3 சிக்ஸர், 11 பவுண்டரி), தவான் 46 ரன்களும் (1 சிக்ஸர், 4 பவுண்டரி) சேர்த்தனர். மிக சிறப்பாக விளையாடிய டெல்லி அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 16.3 ஓவரிலே இலக்கை அடைந்தது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணி தனது 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl 2021 updates dc vs kkr and mi vs rr match highlights

Next Story
ஐ.பி.எல். கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு தாவிய சிஎஸ்கே! IPL 2021 Points Table Tamil News: MS Dhoni’s CSK jumps to TOP of the points table
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com