PBKS VS SRH Highlights: டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. கேப்டன் கே.எல்.ராகுல் 4 ரன்களுடனும், 2 பவுண்டரியை ஓட விட்ட மயங் அகர்வால் 25 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் நட்சரத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல் (15), தீபக் ஹூடா (13) தலா 2 பவுண்டரிகளை சிதறவிட்டு அவுட் ஆகினர். அதோடு தொடரில் பெரிதும் சோபிக்காத நிக்கோலஸ் பூரன் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஆல்-ரவுண்டர் வீரர் ஷாருக் கான் 2 சிக்ஸர்களை பறக்க விட்டு 22 ரன்களில் ஆட்டமிழக்கவே, பின்னர் களம் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வலுவான ஸ்கோரை சேர்க்க முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் ஏமாற்றமே கண்டது. 20 ஓவர்கள் முடிய 2 பந்து இருந்த போதே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த அந்த அணி, 120 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
துல்லியமாக பந்துகளை வீசிய சன்ரைசர்ஸ் அணியில், கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், சித்தார்த் கவுல் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 120 பந்துகளில் 120 ரன்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பதால் நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. அந்த அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டேவிட் வார்னர் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளை சிதறடித்து ஃபேபியன் ஆலன் பந்தில் மயங் அகர்வால் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கொரோனா தனிமைப்படுத்ததலில் இருந்து அணியில் சேர்ந்த நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், மறுமுனையில் இருந்த ஜானி பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை தொடர்ந்த இந்த ஜோடி 15 ஓவர்களில் 95 ரன்கள் சேர்த்தது.
ஐதராபாத் அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து அரைசதம் கடந்தார் துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ். கேன் வில்லியம்சனுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து பேர்ஸ்டோவ் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். 3 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை பறக்கவிட்ட பேர்ஸ்டோவ் 63 ரன்கள் சேர்த்தார். அவருடன் இறுதி வரை களத்தில் இருந்த கேன் வில்லியம்சன் 16 ரன்கள் சேர்த்தார்.
இதுவரை வெற்றிக் கணக்கை துவங்காமல் இருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)