15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இம்முறை கூடுதலாக 2 அணிகள் ஐபிஎல் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று மோதவிருக்கும் இரு அணிகளும் தங்களது கேப்டன்களை மாற்றியுள்ளனர். சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜாவும், கேகேஆர் அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கேகேஆர் ஷ்ரேயஸ் ஐயரை 12.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.
சிஎஸ்கே அணி விவரம்
ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, டெவோன் கான்வே, சிவம் துபே, என் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், சுப்ரான்ஷு சேனாபதி, டுவைன் பிராவோ, பகத் வர்மா, டுவைன் பிரிட்டோரியஸ், கிட்செல் சன்ஃபான்னர், , ஆடம் மில்னே, சிம்ரஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, ராஜவர்தன் ஹங்கர்கேகர், பிரசாந்த் சோலங்கி.
கேகேஆர் அணி விவரம்
ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், நிதிஷ் ராணா, டிம் சவுத்தி, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஷிவம் மாவி, வருண் சகரவர்த்தி, உமேஷ் யாதவ், சமிகா கருணாரத்னே, ஷெல்டன் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), பாபா இந்திரஜித்(விக்கெட் கீப்பர்) அமன் கான், பிரதம் சிங், ரமேஷ் குமார், ரிங்கு சிங், அபிஜீத் தோமர், அனுகுல் ராய், முகமது நபி, அசோக் ஷர்மா, ரசிக் சலாம்.
மேட்ச் நேரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியை இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நேரலையில் காணலாம்
கிரிக்கெட் மேட்ச் லைவ் செய்யும் டிவி சேனல்கள்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 4, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD1 உள்ளிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் கீழ் இயங்கும் அனைத்து சேனல்களிலும் காணலாம்.
ஆன்லைனில் மேட்ச் நேரலை பார்ப்பது எப்படி
ஐபிஎல் 2022இல் முதல் போட்டியை, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையாக காணலாம். இல்லையெனில், நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் மேட்ச் ஸ்கோரை உடனடியாக பார்த்து தெரிஞ்சுக்கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.