ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 46வது ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றிபெற்றது. முதலில் விளையாடிய சென்னை அணியில், ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி 182 ரன்களை குவித்து சாதனை படைத்தது.
Advertisment
சென்னை அணியின் கேப்டன் பதவி ஜடேஜாவிடம் இருந்து மீண்டும் தோனிக்கு கொடுக்கப்பட்ட முதல் ஆட்டத்திலே சென்னை அணி வெற்றிபெற்றது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று பிளேஆஃப் சுற்றுக்குள் சிஎஸ்கே நுழையும் என்கிற நம்பிக்கை ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
போட்டி ஆரம்பத்தில் டாஸ் போட தோனி நடந்துவருவதை பார்த்ததும் மைதானமே ஆரவாரமாக மாறியது. உலக அளவில் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக தோனி திகழ்கிறார். அவருக்கான ரசிகர்கள் எந்த நாட்டிலும், எதிர் அணியிலும் கூட இருப்பார்கள். அப்படியொரு விஷயம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
சன்ரைசர்ஸ் அண்ட் சிஎஸ்கே மேட்ச் முடிவடைந்தபிறது, ஸ்டெயின் தன்னுடைய பழைய ஜெர்சியை தோனியிடம் கொண்டு சென்று ஆட்டோகிராப் கேட்டார். இதற்கு தோனியும் நெகிழ்ச்சியுடன் கையெழுத்து போட்டார்.
அப்போது, எடுக்கப்பட்ட இருவரின் புகைப்படமும் சமூக வலைதளத்தில் சிறிது நேரத்திலே வைரலாகியது. உலகின் தலைச் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கியவர் ஸ்டெயின் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஸ்டெயின் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் குழுவில் ஒரு பகுதியாக உள்ளார்.
டாஸை தொடர்ந்து, தோனி அடுத்த சீசனில் "மஞ்சள்" ஜெர்சியை அணிந்திருப்பதைக் காணலாம் என தெளிவுபடுத்தினார். அதேசமயம், டேனி மோரிசனிடம் பேசுகையில்,மஞ்சள் நிற ஜெர்சியில் வருவேன் என்கிற பதிலில் சில சஸ்பென்ஸையும் வைத்துவிட்டு சென்றார்.
அவரது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் பட்சத்தில், அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் பயிற்சியாளராக மஞ்சள் ஜெர்சியில் வருவேன் என்பதை தோனி மறைமுகமாக கூறுகிறாரா என்பதும் தெரியவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil