IPL 2022, RCB vs KKR Live score updates in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த 6வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
கொல்கத்தா அணியில் அஜிங்க்யா ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அணிக்கு வலுவான ரன்களை சேர்க்க முயற்சித்த இந்த ஜோடியில் வெங்கடேஷ் ஐயர் 10 ரன்னிலும், ரஹானே 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த வீரர்களில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 13 ரன்னிலும், நிதிஷ் ராணா 10 ரன்னிலும், சுனில் நரைன் 12 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 14 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே திணறி வந்த கொல்கத்தா அணி 128 ரன்கள் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
பந்துவீச்சில் மிரட்டிய பெங்களூரு அணி தரப்பில், வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
An exceptional performance from our bowlers to bowl out KKR for 1️⃣2️⃣8️⃣. 👏🏻👏🏻
Time for our batters to get the job done. 🤜🏻🤛🏻#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #RCBvKKR pic.twitter.com/nI5dlMZgK8— Royal Challengers Bangalore (@RCBTweets) March 30, 2022
தொடர்ந்து 129 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது கொல்கத்தா அணி. பெங்களூரு அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அனுஜ் ராவத் பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் ஃபாப் டு பிளெஸ்சிஸ் 5 ரன்களில் வெளியேறினார். இவர்களைத்தொடர்ந்து 12 ரன்களை சேர்த்த நிலையில் இருந்த விராட் கோலி உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 7 ஓவர்கள் முடிவில் 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன் பிறகு டேவிட் வில்லி - ரூதர்போர்டு ஜோடி சற்று நிலைத்து நின்று விளையாடி வந்தனர். இந்த ஜோடியில் வில்லி 18 ரன்களிலும், ரூதர்போர்டு 28 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் இருந்த ஷாபாஸ் நதீம் சிறிது நேரம் அதிரடி காட்டி 3 சிக்சர்களை பறக்கவிட்டு 27 ரன்னில் அவுட் ஆனார்.
பெங்களூரு அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஹர்ஷல் பட்டேல் - தினேஷ் கார்த்திக் ஜோடி 19-வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி அடித்து இருந்தனர். இதனால், பெங்களூரு அணி வெற்றி பெற கடைசி 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ரஸல் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் சிக்ஸர், 2வது பந்தில் பவுண்டரி என அதிரடி காட்டி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், அந்த அணி தொடரில் தனது முதல் வெற்றியையும் பதிவு செய்துள்ளது. சென்னை அணியை தொடக்க ஆட்டத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
That's that from Match 6 of #TATAIPL.
A nail-biter and @RCBTweets win by 3 wickets.
Scorecard - https://t.co/BVieVfFKPu #RCBvKKR #TATAIPL pic.twitter.com/2PzouDTzsN— IndianPremierLeague (@IPL) March 30, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 23:25 (IST) 30 Mar 2022அண்ட்ரே ரஸல் பந்தை ரனகளமாக்கிய தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி மேட்ச் ஃபினிஷ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அண்ட்ரே ரஸல் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் ஒரு சிக்ஸ், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெறச் செய்தார். அண்ட்ரே ரஸல் பந்தை ரனகளமாக்கிய தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்து மேட்ச்சை ஃபினிஷ் செய்தார். பெங்களூரு அணி 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
- 23:18 (IST) 30 Mar 2022அடுத்தடுத்து 2 விக்கெட்; 1 ஓவரில் 7 ரன் தேவை... வெற்றி இலக்கை எட்டுமா பெங்களூரு அணி?
பெங்களூரு அணி 19 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்துள்ளது. 129 ரன் என்ற வெற்றி இலக்கை எட்டுவதற்கு 1 ஓவரில் 7 ரன் எடுக்க வேண்டும். 6 பந்துகளில் 7 ரன் அடித்து வெற்றி இலக்கை எட்டுமா பெங்களூரு அணி?
- 23:09 (IST) 30 Mar 2022பெங்களூரு அணியில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு அவுட்
பெங்களூரு அணியின் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 40 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிம் சவுதி பந்தில் தேர்ட் மேனில் நின்றிருந்த தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பெங்களூரு அணி 18 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து திணறி வருகிறது.
- 23:03 (IST) 30 Mar 2022பெங்களூரு அணி 3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டுமா?
பெங்களூரு அணி 17 ஓவருக்கு 5 விக்கெட் இழந்து 105 ரன் எடுத்துள்ளது. பெங்களூரு அணி வெற்றி பெற 3 ஓவர்களில் 24 ரன் எடுக்க வேண்டும்.
- 22:05 (IST) 30 Mar 20227 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி!
129 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தற்போது வரை 3 விக்கெட்களை இழந்துள்ளது. அந்த அணி 7 ஓவர்கள் முடிவில் 40 ரன்கள் சேர்த்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக்கு 78 பந்துகளில் 89 ரன்கள் தேவை.
- 22:04 (IST) 30 Mar 20227 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி!
129 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தற்போது வரை 3 விக்கெட்களை இழந்துள்ளது. அந்த அணி 7 ஓவர்கள் முடிவில் 40 ரன்கள் சேர்த்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக்கு 78 பந்துகளில் 89 ரன்கள் தேவை.
- 21:47 (IST) 30 Mar 20223 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த பெங்களூரு!
129 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 விக்கெட்களை இழந்துள்ளது. தற்போது அந்த அணி 3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் முன்னனி வீரர்கள் ஃபாஃப் டு பிளெசிஸ் 5 ரன்னிலும், விராட் கோலி 12 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர்.
- 21:24 (IST) 30 Mar 2022பந்துவீச்சில் மிரட்டிய பெங்களூரு; 128 ரன்னில் சுருண்டது கொல்கத்தா!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 128 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதனால் பந்துவீச்சில் தொடக்கம் முதலே மிரட்டி வந்த பெங்களூரு அணிக்கு 129 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸ்ஸல் 25 ரன்கள் சேர்த்தார். பெங்களூரு அணி தரப்பில், வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
- 20:57 (IST) 30 Mar 20229 -வது விக்கெட்டை இழந்த கொல்கத்தா!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்துவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதன் 9வது விக்கெட்டை இழந்துள்ளது. களத்தில் இருந்த டிம் சவுத்தி 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
தற்போது கொல்கத்தா அணி 15 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:38 (IST) 30 Mar 20227வது விக்கெட்டை இழந்த கொல்கத்தா!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்துவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதன் 7வது விக்கெட்டை இழந்துள்ளது. களத்தில் இருந்த சம் பில்லிங்ஸ் 14 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
தற்போது கொல்கத்தா அணி 12 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:30 (IST) 30 Mar 20226 விக்கெட்டுகளை பறிகொடுத்த கொல்கத்தா; 10 ஓவர்கள் முடிவில்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்துவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர் விக்கெட் சரிவை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் அவ்வப்போது சிக்ஸர், பவுண்டரிகளுடன் ஸ்கோர் உயர்ந்து வருகிறது.
கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:10 (IST) 30 Mar 2022அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; தடுமாறும் கொல்கத்தா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், பேட்டிங் செய்துவரும் கொல்கத்தா அணி அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணி 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ரன்களை சேர்த்துள்ளது.
- 19:38 (IST) 30 Mar 2022ஆட்டம் இனிதே ஆரம்பம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்ச்சை நடந்துகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
இதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்
அஜிங்க்யா ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் களம் புகுந்துள்ளனர்
- 19:23 (IST) 30 Mar 2022டாஸ் வென்ற பெங்களூரூ பந்து வீச்சு தேர்வு; கொல்கத்தா முதலில் பேட்டிங்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்ச்சை நடந்துகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சரியாக 7:30 மணிக்கு பேட்டிங் செய்ய களமிறங்கும்.
rcb have won the toss and they will bowl first against kkr.
— IndianPremierLeague (@IPL) March 30, 2022
Live - https://t.co/BVieVfFKPu rcbvkkr tataipl pic.twitter.com/oZmaJ5IyTH - 19:15 (IST) 30 Mar 2022கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளேயிங் லெவன்!
அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
- 19:14 (IST) 30 Mar 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பிளேயிங் லெவன்!
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்
- 19:01 (IST) 30 Mar 2022நேருக்கு நேர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 13 போட்டிகளிலும் வென்றுள்ளன. கொல்கத்தா அணி மும்பை பாட்டீல் ஸ்டேடியத்தில் ஒரு ஆட்டத்திலும் தோல்வியடையவில்லை, அதே நேரத்தில் பெங்களூரு இங்கு விளையாடிய மூன்றில் 1ல் மட்டுமே வென்றுள்ளது.
- 18:23 (IST) 30 Mar 2022கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் பட்டியல்!
ஆரோன் பின்ச், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, பாபா இந்திரஜித், நிதிஷ் ராணா, பிரதம் சிங், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்) அசோக் ஷர்மா, பாட் கம்மின்ஸ், ரசிக் தார், சிவம் மாவி, டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அமன் சக்ரவர்த்தி, , ஆண்ட்ரே ரசல், அனுகுல் ராய், சாமிகா கருணாரத்னே, முகமது நபி, ரமேஷ் குமார், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன்
- 18:22 (IST) 30 Mar 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களின் பட்டியல்!
விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஜோஷ் ஹேசில்வுட், ஷாபாஸ் அகமது, அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், மஹிபால் லோம்ரோர், ஃபின் ஆலன், ஷெர்பேன் ருதர்ஃபோர்ட், ஜேசன் சுயா பெஹ்ரண்ட், பிரபுதேசாய், சாமா மிலிந்த், அனீஷ்வர் கவுதம், கர்ண் சர்மா, டேவிட் வில்லி, லுவ்னித் சிசோடியா, சித்தார்த் கவுல்
- 17:51 (IST) 30 Mar 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை!
15-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
A high octane clash on the cards tonight. 🔥⚔️
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 30, 2022
It’s GAME ON! 🤜🏻🤛🏻playbold wearechallengers ipl2022 mission2022 rcb ್ಮRCB rcbvkkr pic.twitter.com/UJcuMsLLfP - 17:46 (IST) 30 Mar 2022‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.