Advertisment

GT vs LSG Highlights: லக்னோவை வெளுத்து வாங்கிய குஜராத்... 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!

IPL 2022: Match 4, Gujarat Titans vs Lucknow Super Giants; Check out score and updates Tamil News: லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2022 Tamil News: GT vs LSG live score updates

IPL 2022 Match GT vs LSG, Live score updates in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று திங்கள் கிழமை நடந்த 4வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்டிக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.

Advertisment

இதில் கேப்டன் கேஎல் ராகுல் (0) ஷமியின் வேகத்தில் சிக்கி கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 7 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த எவின் லூயிஸ் 10 ரன்னில் ஆட்டமிழக்க, ஷமியின் வேகத் தாக்குதலில் தாக்குபிடிக்காத மனிஷ் பாண்டே 6 ரன்னில் அவுட் ஆனார்.

இப்படியான தொடர் விக்கெட் சரிவால் லக்னோ அணி ரன் சேர்க்க தடுமாறியது. எனினும், அப்போது களத்தில் இருந்த தீபக் ஹூடா - ஆயுஷ் படோனி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் சரிவை மீட்டது. தொடர்ந்து அதிரடியாகவும் விளையாடி இந்த ஜோடியில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளை விளாசி தனது அரைசத்தை பதிவு செய்த தீபக் ஹூடா 55 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும், தனது அதிரடியை கைவிடாத இளம் வீரர் ஆயுஷ் படோனி 39 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விளாசி 53 ரன்களை சேர்த்து அரைசதம் அடித்தார். அவர் 54 சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களில் க்ருனால் பாண்டிய 21 ரன்கள் சேர்த்திருந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 158 ரன்கள் சேர்த்தது. எனவே, குஜராத் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. லக்னோ அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய குஜராத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷுப்மன் கில் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி நடையை கட்டினார். பின்னர் வந்த விஜய் சங்கர் 4 ரன்னில் அவுட் ஆனார். அடுத்தடுத்த விக்கெட் இழப்பால் தவித்த அணியை மீட்க தொடக்க வீரர் மேத்யூ வேட்டுடன் கேப்டன் ஹர்டிக் பாண்டியா ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக ரன்களை சேர்த்து வந்த இந்த ஜோடியில் கேப்டன் ஹர்டிக் பாண்டியா 33 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த மேத்யூ வேட் 30 ரன்களிலும், டேவிட் மில்லர் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் வெற்றி இலக்கை எட்ட அந்த அணியின் ஆட்டத்தில் வேகம் குறைந்தது.

எனினும் களத்தில் பொறுமையாக மட்டையை சுழற்றிய ராகுல் தெவாடியா - அபினவ் மனோகர் ஜோடி அதிரடி காட்டி 19.4 ஓவரில் இலக்கை எட்டி பிடித்தது. இந்த ஜோடியில் ராகுல் தெவாடியா 40 ரன்களும், அபினவ் மனோகர் 15 ரன்களும் சேர்த்தனர். இந்த அசத்தலான வெற்றியின் மூலம் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 23:30 (IST) 28 Mar 2022
    லக்னோவை வெளுத்தி வாங்கிய குஜராத்... 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் தெவாடியா 40 ரன்கள் சேர்த்தார்.


  • 23:20 (IST) 28 Mar 2022
    குஜராத் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 11 ரன்கள் தேவை.

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் குஜராத் அணி வெற்றி பெற 6 பந்துகளில் 11 ரன்கள் தேவை.


  • 23:14 (IST) 28 Mar 2022
    குஜராத் அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை!

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் குஜராத் அணி வெற்றி பெற 12 பந்துகளில் 20 ரன்கள் தேவை


  • 23:11 (IST) 28 Mar 2022
    டேவிட் மில்லர் அவுட்

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் குஜராத் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் மில்லர் 30 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆனார்.


  • 23:09 (IST) 28 Mar 2022
    ரன்களை வாரிக்கொடுக்கும் லக்னோ... வெற்றியை நோக்கி குஜராத்!

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் குஜராத் அணி வெற்றி பெற 18 பந்துகளில் 29 ரன்கள் தேவை. 17 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை சேர்த்துள்ளது.


  • 22:58 (IST) 28 Mar 2022
    15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் குஜராத் அணி வெற்றி பெற 30 பந்துகளில் 68 ரன்கள் தேவை. 15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்களை சேர்த்துள்ளது.


  • 22:41 (IST) 28 Mar 2022
    அடுத்தடுத்த விக்கெட் இழப்பு!

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் குஜராத் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேத்யூ வேட் 30 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆனார்.


  • 22:38 (IST) 28 Mar 2022
    கேப்டன் பாண்டியா அவுட்... குஜராத் நிதான ஆட்டம்!

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் குஜராத் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஹர்டிக் பாண்டியா 33 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனால் அந்த அணி தற்போது நிதானமாக விளையாடி வருகிறது.


  • 22:31 (IST) 28 Mar 2022
    10 ஓவர்கள் முடிவில் குஜராத்!

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் குஜராத் அணி 10 ஓவர்கள் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்களை சேர்த்துள்ளது. கேப்டன் ஹர்டிக் பாண்டியா 33 ரன்களுடனும், மேத்யூ வேட் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


  • 22:14 (IST) 28 Mar 2022
    பவர் பிளே முடிவில் குஜராத்!

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் குஜராத் அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 44 ரன்களை சேர்த்துள்ளது. கேப்டன் ஹர்டிக் பாண்டியா 19 ரன்களுடனும், மேத்யூ வேட் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


  • 21:56 (IST) 28 Mar 2022
    விஜய் சங்கர் அவுட்!

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் குஜராத் அணி அதன் 2வது முதல் விக்கெட்டை இழந்துள்ளது. 4 ரன்கள் சேர்த்த விஜய் சங்கர் க்ளீன் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.


  • 21:52 (IST) 28 Mar 2022
    குஜராத்துக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு; ஷுப்மன் கில் அவுட்!

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் குஜராத் அணி தற்போது முதல் விக்கெட்டை இழந்துள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய ஷுப்மன் கில் பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டினார்.


  • 21:52 (IST) 28 Mar 2022
    கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய லக்னோ... குஜராத்துக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு!

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீசிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லக்னோ அணி தரப்பில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா (55), இளம் வீரர் ஆயுஷ் படோனி (54) அரைசதம் விளாசினர். குஜராத் அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


  • 21:19 (IST) 28 Mar 2022
    லக்னோ இளம் வீரர் படோனி அரைசதம்!

    குஜராத் டைட்டன்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் ஆயுஷ் படோனி அரைசதம் விளாசியுள்ளார். அவர் 39 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விளாசி 53 ரன்களை சேர்த்துள்ளார்.


  • 21:15 (IST) 28 Mar 2022
    கடைசி ஓவர்களில் அதிரடி... வலுவான இலக்கை நோக்கி லக்னோ!

    குஜராத் டைட்டன்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி வருகிறது. 18 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை சேர்த்துள்ளது.


  • 21:15 (IST) 28 Mar 2022
    கடைசி ஓவர்களில் அதிரடி... வலுவான இலக்கை நோக்கி லக்னோ!

    குஜராத் டைட்டன்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி வருகிறது. 18 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை சேர்த்துள்ளது.


  • 21:14 (IST) 28 Mar 2022
    கடைசி ஓவர்களில் அதிரடி... வலுவான இலக்கை நோக்கி லக்னோ!

    குஜராத் டைட்டன்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி வருகிறது. 18 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை சேர்த்துள்ளது.


  • 21:01 (IST) 28 Mar 2022
    ஹூடா அவுட்!

    குஜராத் டைட்டன்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வந்த தீபக் ஹூடா 55 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.


  • 20:47 (IST) 28 Mar 2022
    அதிரடி காட்டும் ஹூடா... ஸ்கோரை உயர்த்தும் லக்னோ!

    குஜராத் டைட்டன்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும், தற்போது களத்தில் விளையாடி வரும் தீபக் ஹூடா அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார். மேலும், 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளை விளாசி அவர் தனது அரைசத்தை பதிவு செய்துள்ளார். லக்னோ அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை சேர்த்துள்ளது.


  • 20:03 (IST) 28 Mar 2022
    ஷமி - தரமான பந்துவீச்சு!

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சில் மிரட்டி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர், கேஎல் ராகுல், குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


  • 19:48 (IST) 28 Mar 2022
    டி காக் அவுட்!

    குஜராத் டைட்டன்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி காக் 7 ரங்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.


  • 19:34 (IST) 28 Mar 2022
    கேஎல் ராகுல் அவுட்!

    குஜராத் டைட்டன்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.


  • 19:32 (IST) 28 Mar 2022
    ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய 4வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மாலை 7:30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

    தற்போது டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஜோடி களமிறங்கியுள்ளனர்.


  • 19:08 (IST) 28 Mar 2022
    இரு அணிகளின் சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்:

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்):

    கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்

    குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்):

    ஷுப்மன் கில், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், வருண் ஆரோன், முகமது ஷமி


  • 19:05 (IST) 28 Mar 2022
    டாஸ் வென்ற அணி குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு தேர்வு!

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய 4வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மாலை 7:30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கும்.


  • 18:28 (IST) 28 Mar 2022
    100 வது சிக்ஸரை அடிப்பாரா கேப்டன் ஹர்திக் பாண்டியா?

    ஐபிஎல் தொடரில் 100 சிக்ஸர்களை அடிக்க குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்னும் இரண்டு சிக்ஸர்களை அடிக்க வேண்டும்.

    முன்னதாக, ஹர்திக் பாண்டியா 2015ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார். அப்போது அவருக்கு ரூ. 10 லட்சம் சம்பளமாக வழங்குப்பட்டது. அவரது அதிரடி ஆட்டத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட மும்பை அணி 2016 மெகா ஏலத்தின் போது 2 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. தொடர்ந்து நடந்த சீசன்களில் ஆல்ரவுண்டராக ஜொலித்த அவரை 2018ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தின் போது மும்பை அணி அவருக்கு 11 கோடிகள் வழங்கி அணியில் தக்க வைத்தது.

    சமீப ஆண்டுகளாக அவரது ஃபார்மில் பாண்டிய பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், 2022ம் ஆண்டுக்கான ஏலத்திற்கு முன்னதாக மும்பை அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அவரை 15 கோடிக்கு வாங்கிய அறிமுக அணி குஜராத் அவரையே கேப்டனாக நியமித்துள்ளது.

    இதுவரை 92 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா 1476 ரன்களை சேர்த்துள்ளார். மேலும் 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 அரைசதங்களை பதிவு செய்துள்ளார். அவரது கேப்டன்சி எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.


  • 17:53 (IST) 28 Mar 2022
    மும்பை வானிலை என்ன?

    மும்பையில் மழை குறுக்கீடு இருக்காது. ஆனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் கூட கடும் வெப்பம் நிலவுவதால் கிரிக்கெட் வீரர்களுக்கு சற்று சவாலாக இருக்கும்.


  • 17:53 (IST) 28 Mar 2022
    வான்கடே ஆடுகளம் எப்படி?

    இன்றைய ஆட்டம் நடக்கும் மும்பை வான்கடே ஆடுகளம் செம்மண் நிறைந்தது. பந்து நன்கு பவுன்ஸ் ஆகும். அதே நேரத்தில் பேட்டிங்குக்கும் உகந்ததாக இருக்கும். மைதானத்தின் நேர்பகுதி பவுண்டரி தூரம் குறைவாக உள்ளது. எனவே இங்கு 170-180 ரன்கள் வரை எடுத்தால் தான் சவாலான ஸ்கோராக இருக்கும்.

    இந்த மைதானத்தை பொறுத்தவரை வெற்றி இலக்கை துரத்திய அணிகளே அதிகம் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2020 முதல், இங்கு 20 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 14 முறை இலக்கை துரத்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.


  • 17:53 (IST) 28 Mar 2022
    வான்கடே ஆடுகளம் எப்படி?

    இன்றைய ஆட்டம் நடக்கும் மும்பை வான்கடே ஆடுகளம் செம்மண் நிறைந்தது. பந்து நன்கு பவுன்ஸ் ஆகும். அதே நேரத்தில் பேட்டிங்குக்கும் உகந்ததாக இருக்கும். மைதானத்தின் நேர்பகுதி பவுண்டரி தூரம் குறைவாக உள்ளது. எனவே இங்கு 170-180 ரன்கள் வரை எடுத்தால் தான் சவாலான ஸ்கோராக இருக்கும்.

    இந்த மைதானத்தை பொறுத்தவரை வெற்றி இலக்கை துரத்திய அணிகளே அதிகம் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2020 முதல், இங்கு 20 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 14 முறை இலக்கை துரத்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.


  • 17:32 (IST) 28 Mar 2022
    உத்தேச அணி விபரம்:

    குஜராத் டைட்டன்ஸ்:

    ஷுப்மான் கில், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), மேத்யூ வேட், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ஜெயந்த் யாதவ், லாக்கி பெர்குசன், முகமது ஷமி.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

    கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹோடா, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், துஷ்மந்த சமீரா, ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.


  • 17:30 (IST) 28 Mar 2022
    இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

    குஜராத் டைட்டன்ஸ்:

    அபினவ் மனோகர், டேவிட் மில்லர், குர்கீரத் சிங், சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், மேத்யூ வேட், ரஹ்மானுல்லா குர்பாஸ், விருத்திமான் சாஹா, அல்ஜாரி ஜோசப், தர்ஷன் நல்கண்டே, டொமினிக் டாக்டர் யாழ்கண்டே , லாக்கி பெர்குசன், முகமது ஷமி, நூர் அகமது, பிரதீப் சங்வான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய், வருண் ஆரோன், யாஷ் தயாள்.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

    கேஎல் ராகுல் (கேப்டன்), மனன் வோஹ்ரா, எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே, குயின்டன் டி காக், ரவி பிஷ்னோய், துஷ்மந்த சமீரா, ஷாபாஸ் நதீம், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், அங்கித் ராஜ்பூட், அவேஷ் கான், ஆண்ட்ரூ டை, மார்கஸ் ஸ்டோனிஸ் கைல் மேயர்ஸ், கரண் சர்மா, கிருஷ்ணப்ப கவுதம், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா. ஜேசன் ஹோல்டர்.


  • 17:29 (IST) 28 Mar 2022
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ‘குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்’ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.


Sports Cricket Ipl Live Cricket Score Live Updates Ipl Cricket Ipl News Gujarat Titans Kl Rahul Hardik Pandya Ipl 2022
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment