ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சேன்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 வெற்றி 4 தோல்வி 1 முடிவில்லையுடன் 11 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசியாக நடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தற்போது 11 புள்ளிகள் பெற்றுள்ள சென்னை அணி ப்ளே அப் சுற்றுக்கு முன்னேற அடுத்து வரும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதேபோல், 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 5 வெற்றி 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி கடைசியாக விளையாடிய இரு போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றியை பெற்றுள்ள நிலையில், அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே அப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும். ஏற்கனவே ஏப்ரல் 8-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.
இந்த தோல்விக்கு பழி தீர்க்க மும்பை அணியும், கடைசி 3 போட்டிகளில் வெற்றியை காணாத சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முயற்சியல் களமிறங்க உள்ளதால் இந்த போட்டி பரபரப்பின் உச்சமாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மழை விளையாடியது போல இந்த போட்டியிலும் மழை குறுக்கீடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிக காற்றழுத்த தாழ்புநிலை காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெற்று வரும் நிலையில், சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும் சென்னை மும்பை மோதும் போட்டிக்கு மழை பாதிப்பு இருக்காது. நிச்சயம் போட்டி முழுவதுமாக நடைபெறும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.