Chennai Super Kings (CSK) complete players list, CSK squad for IPL 2023 Tamil News: 16-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதில் களமாடும் 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு மிடில் ஆர்டரில் உடனடியாக இடம்பிடிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் தேவை. டுவைன் பிராவோவின் இடத்தை நிரப்ப ஒரு ஆல்-ரவுண்டர், ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் அவசியம். தோனிக்கு பதிலாக ஒரு விக்கெட் கீப்பர் வீரரும் தேவை.
ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:
கைல் ஜேமிசன் (ரூ. 1 கோடி), நிஷாந்த் சிந்து (ரூ. 60 லட்சம்), ஷேக் ரஷீத் (ரூ. 20 லட்சம்), பென் ஸ்டோக்ஸ் (ரூ. 16.25 கோடி), அஜிங்க்யா ரஹானே (ரூ. 50 லட்சம்), அஜய் மண்டல். (20 லட்சம்), பகத் வர்மா (ரூ. 20 லட்சம்).
தக்கவைக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்:
அம்பதி ராயுடு, தீபக் சாஹர், டெவோன் கான்வே, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, எம்.எஸ். தோனி, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, ராஜ்வர்தன் ருந்திரராஜ் ஜாகர்டே, ரவிந்தராஜ் ஜாகர்டே கெய்க்வாட், சிவம் துபே, சிமர்ஜீத் சிங், சுப்ரான்ஷு சேனாபதி, துஷார் தேஷ்பாண்டே
சி.எஸ்.கே அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
ஆடம் மில்னே, சி.ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டன், டுவைன் பிராவோ*, கே.பகத் வர்மா, கே.எம்.ஆசிப், என்.ஜெகதீசன், ராபின் உத்தப்பா
ஐபிஎல் 2023க்கான சி.எ.ஸ்கே முழு அணி வீரர்கள் பட்டியல்:
அம்பதி ராயுடு, தீபக் சாஹர், டெவோன் கான்வே, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, எம்எஸ் தோனி, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் ரவிந்தரா ஹங்கேர், ராஜ்கர் சோலங்கி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, சிமர்ஜீத் சிங், சுப்ரான்சு சேனாபதி, துஷார் தேஷ்பாண்டே, பகத் வர்மா, அஜய் மண்டல், கைல் ஜேமிசன், நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷீத், பென் ஸ்டோக்ஸ், அஜிங்க்யா ரஹானே.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil