IPL mini auction 2023 Tamil News: 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் 3வது வாரத்தில் தொடங்கி மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது.
இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு முடிந்ததால் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
இந்நிலையில், ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் கலந்து கொள்ள மொத்தம் 991 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 714 பேர் இந்திய வீரர்கள், 277 பேர் வெளிநாட்டு வீரர்கள். மேலும் விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வீரர்கள் எப்படி வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்?
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் 2 கோடி ரூபாய் பேண்ட், 1.5 கோடி ரூபாய் பேண்ட், 1 கோடி ரூபாய் பேண்ட் மற்றும் 50 லட்சம் ரூபாய் பேண்ட் என வீரர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அணிகளிடம் மீதமுள்ள தொகை எவ்வளவு?
ஐபிஎல் மினி ஏலத்தில் களமாடும் 10 அணிகளிடம் மீதமுள்ள தொகை விபரம் பின்வருமாறு:
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 42.25 கோடிரூபாய்.
- பஞ்சாப் கிங்ஸ்: 32.20 கோடி ரூபாய்
- லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ்: 23.35 கோடி ரூபாய்.
- மும்பை இந்தியன்ஸ்: 20.55 கோடி ரூபாய்.
- சென்னை சூப்பர் கிங்ஸ்: 20.45 கோடி ரூபாய்.
- டெல்லி கேபிட்டல்ஸ்: 19.45 கோடி ரூபாய்
- குஜராத் டைட்டன்ஸ்: 19.25 கோடி ரூபாய்.
- ராஜஸ்தான் ராயல்ஸ்: 13.20 கோடி ரூபாய்.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: 8.75 கோடி ரூபாய்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 7.05 கோடி ரூபாய்.
2023 சீசனுக்கான மினி ஏலத்தில் உள்ள பெரிய பெயர்கள் யார்?
சாம் குர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் போன்றவர்கள் மினி ஏலத்தில் மிகப்பெரிய பெயர்களாக இருப்பார்கள் மற்றும் ஏலத்தில் பெரிய தொகைக்கு வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2023 மினி-ஏலத்திற்கு வராத குறிப்பிடத்தக்கவர்கள் யார்?
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டுவைன் பிராவோ மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இந்த மினி ஏலத்தில் கலந்து கொள்ள வராத குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.
ஐபிஎல்2023 மினி ஏலத்தில் இந்தியர்கள் யாராவது இருக்கிறார்களா?
மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே போன்றவர்கள் கடந்த மாதம் அணிகளால் வெளியேற்றப்பட்டு தற்போது ரூ. 1 கோடி பேண்டில் உள்ளனர். இதேபோல், அஜிங்க்யா ரஹானே மற்றும் ஜெய்தேவ் உனட்கட் போன்றவர்கள் ரூ.50 லட்சம் பேண்டில் உள்ளனர்.
முழுமையான வீரர்கள் பட்டியல்:
2 கோடி பேண்ட்: நாதன் கவுல்டர்-நைல், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், டாம் பான்டன், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜேமி ஓவர்டன், கிரேக் ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம் , கேன் வில்லியம்சன், ரிலீ ரோசோவ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஏஞ்சலோ மேத்யூஸ், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர்
1.5 கோடி பேண்ட்: சீன் அபோட், ரிலே மெரிடித், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஷகிப் அல் ஹசன், ஹாரி புரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்
1 கோடி பேண்ட்: மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லூக் வூட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்டில், கைல் ஜேமிசன், டாம் ஹென்றி, டாம் ஹென்றி டேரில் மிட்செல், ஹென்ரிச் கிளாசென், தப்ரைஸ் ஷம்சி, குசல் பெரேரா, ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷாய் ஹோப், அக்கேல் ஹொசைன், டேவிட் வைஸ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil