மும்பையை வீழ்த்தியதன் மூலம் சென்னை புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை சென்னையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் அதிகபட்சமாக நேஹால் வதேரா 64 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை அணி தரப்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டெவோன் கான்வே 44 ரன்கள் எடுத்தார்.
பிளே ஆஃப் வாய்ப்பு சி.எஸ்.கே-வுக்கு பிரகாசம்
மும்பையை வீழ்த்தியதன் மூலம் சென்னை புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்து நடைபெற இருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டில் ஜெயித்தால் கூட சென்னை அணி டாப் 2-வில் வந்து விடலாம். டாப் 2-வில் வரும் அணிகளுக்கு ப்ளே ஆ ஃப்-ல் ஒரு தோல்வியை சந்தித்தாலும் கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“