Chennai Super Kings' Ravindra Jadeja - Actor, politician Vijayakanth Tamil News
இந்திய மண்ணில் நடந்து வரும் 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. இப்போட்டியானது வருகிற ஞாயிற்றுகிழமை அகமதாபாத்தில் நடக்கிறது. குவாலிபையர்-2 வெற்றியை ருசிக்கும் அணியை சென்னை சந்திக்க உள்ளது.
Advertisment
ஜடேஜா கலக்கல் ஆட்டம்
இந்நிலையில், சென்னை அணியின் ஆல்ரவுண்டர் வீரரான ரவீந்திர ஜடேஜா குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தசன் ஷனகாவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், ஐபிஎல் தொடரில் தனது 150-வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். நடப்பு சீசனில் சிறப்பாக விளையாடி வரும் ஜடேஜா இதுவரை விளையாடிய 15 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும், 393 ரன்களையும் எடுத்துள்ளார்.
ஜடேஜாவுக்கு ரொம்ப பிடித்த தமிழ் பாடல்
இந்நிலையில், சமீபத்தில் தனது யூடியூப் வீடியோவில் பேசிய தமிழக வீரரான அஸ்வின், இந்திய ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜாவுக்கு மிவும் பிடித்த பிடித்த தமிழ் பாடல் குறித்து பேசியிருந்தார். அந்த வீடியோவில் அஸ்வின், 'பொதுவாக நான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது தமிழ் பாடல்கள் போட்டு கேட்பது வழக்கம். அப்போது ஜடேஜா ஒரு பாடலை கேட்டதும், திடீரென என்னிடம் வந்த, அந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்து விட்டதாக கூறி அதை மீண்டும் ஒருமுறை பிளே செய்ய சொன்னார்' என்று கூறியுள்ளார்.
ஜடேஜாவுக்கு மிகவும் பிடித்து போன அந்த பாடல் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டில் வெளிவந்த வானத்தைப்போல படத்தில் இடம்பிடித்துள்ளது. இயக்குநர் விக்ரமன் இயக்கிய இந்தப்படத்திற்கு எஸ்.ஏ ராஜ்குமார் இசைமைத்து இருந்தார். இப்படத்தில் நடிகர் பிரபு, நடிகை மீனா, நடிகை கவுசல்யா போன்றோர் முன்னணி ரோலில் நடித்து இருந்தனர்.
மைதானத்தில் ஒலித்த பாடல்
ஜடேஜாவுக்கு விருப்பமான 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' பாடலை குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சேப்பாக்கம் மைதானத்தில் டி.ஜே ஒலிக்க விட, அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் அனைவரும் கோரஸ் பாடியும், எழுந்து நின்று ஆடியும் மகிழ்ந்தனர். இந்த வீடியோவை டி.ஜே வி.டிஜே ஜென் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியது.
Namma Jadeja ku pudicha paata podalana eppadi ! and it turned into a wholesome moment ! 💛
எங்கள் வீட்டில் ⁰எல்லா நாளும் கார்த்திகை⁰எங்கள் நிலவில் ⁰என்றும் இல்லை தேய்பிறை !