Advertisment

புது மலிங்காவை கண்டுபிடித்த தோனி: இவருக்கு மட்டும் எப்படிப்பா இப்படி சிக்குது?

கண்டியைச் சேர்ந்த பத்திரனா பள்ளி அணிக்காக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவரது பந்துவீச்சு வீடியோ சென்னை அணியின் வீரர்கள் தேர்வுக்குழுவை கவர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
IPL 2023: How CSK GOT ‘new Malinga' Tamil News

Matheesha Pathirana CSK (Photo credit: R. Pugazh Murugan)

IPL 2023 - Matheesha Pathirana - Chennai Super Kings Tamil News: இறுதிப் போட்டியின் கடைசி பந்தில் லசித் மலிங்கா வீசிய ஸ்லோ யார்க்கர் பந்து தான் 2019 ஐ.பி.எல் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸிடம் இருந்து பறித்தது. அது சென்னையை மிகவும் பாதித்தது. ஆனால், யார்க்கர் வீசுவதில் சிறந்த வீரரான இலங்கையின் மலிங்காவைப் போலவே திறமையாக செயல்படக்கூடிய ஒரு வீரரை சென்னை அணி கண்டுபிடிக்க நீண்ட ஆண்டுகள் எடுக்கவில்லை. அத்தகைய ஒரு சிறந்த வீரரான புது மலிங்காவை நடப்பு சீசனில் களமிறக்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

Advertisment

மும்பை அணிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தின் போது அந்த புது மலிங்கா 4 ஓவர்களுக்கு 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இலங்கையில் பள்ளி படிப்பை படித்து வரும் மாணவன் 'மதீஷா பத்திரனா' தான் தோனி கண்டுபிடித்த புதிய மலிங்கா.

கண்டியைச் சேர்ந்த பத்திரனா பள்ளி அணிக்காக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவரது பந்துவீச்சு வீடியோ சென்னை அணியின் வீரர்கள் தேர்வுக்குழுவை கவர்ந்துள்ளது. அதன்பிறகு அவர் எப்படி அணியில் இணைந்தார் என்பதை சென்னை அணியின் முக்கிய அங்கமாக இருக்கும் அதிகாரி ஒருவர் விவரித்துள்ளார். அதை பின்வருமாறு பார்க்கலாம்.

"பத்திரனா ரா-வாக (raw) இருந்தார். ஆனால், நல்ல வேகம் கொண்டிருந்தார்… நாங்கள் அவரை ஒரு வலைப் பந்துவீச்சாளராக விரும்பினோம். ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அனுமதி பெற முடியவில்லை.

கேப்டன் எம்எஸ் தோனி வினோதமான ஆக்சனை கொண்ட நல்ல பந்துவீச்சாளர்களின் மீது ஈர்ப்பு அதிகமுள்ளவர். அதனால், அதற்கான முயற்சியை அணி நிர்வாகம் கைவிடவில்லை. பத்திரனா அணிகளை உடைக்க அதிக நேரம் எடுக்கவில்லை. மேலும் லங்கா லீக்குகளில் டி20 போட்டிகளுக்குப் பிறகு, அவர் அபுதாபியில் டி10 கிரிக்கெட்டில் விளையாடிக்கொண்டிருந்தார், அங்கு சி.எஸ்.கே ஆதரவு-பணியாளர்களும் இருந்தனர்.

இப்போது அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் டுவைன் பிராவோவும் லீக்கில் விளையாடிக்கொண்டிருந்தார். எல்லோரும் அவர் ஒரு வாய்ப்பு என்று ஒப்புக்கொண்டனர். 2022 ஐ.பி.எல்.லின் போது ஆடம் மில்னே காயம் அடைந்தபோது, ​​அவரை அணியில் சேர்க்க முடிவு செய்தோம்.2022 இல் பத்திரனா சிஎஸ்கே பயிற்சியில் சேர்ந்த பிறகுதான் கேப்டன் தோனி அவரைப் பார்த்தார். அவருக்கு உடனடியாக அவரை பிடித்துப்போனது. ஆனால் அவரை கவனமாகக் கையாள வேண்டும் என்பதை கேப்டன் புரிந்து கொண்டார்.

பத்திரனா உடனடியாக விளையாடவில்லை, ஆனால் பயிற்சி ஊழியர்களால் நன்கு பட்டை தீட்டப்பட்டார். நாங்கள் அவரை ஓரிரு ஆட்டங்களில் விளையாடினோம். ஆனால் அணி நிர்வாகம் அவர் அணியில் ஒரு மேட்ச்-வின்னர் இருப்பதாகக் கண்டறிந்தது, அவர் கவனமாகக் கையாள முடிவு செய்தது.

பத்திரனா, அதன் பின்னர், சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல முன்னேற்றங்களைச் செய்து, இந்த சீசனில் சென்னை அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரது ஆபத்தான யார்க்கர்களால், 20 வயதான அவரது டெத் ஓவர்களை பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவதை கடினமாக்கியுள்ளது. மேலும் அவர்கள் பிளே-ஆஃப்-க்கு முன்னேறி வரும் நிலையில், அணியில் தனக்கான இடத்தை அவர் தானாகவே உறுதி செய்துவிட்டார்.

அதைத்தான், தோனியும் ஏற்கனவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பத்திரனாவின் பந்துவீச்சு ஆக்சன் வழக்கமானது அல்ல என்பது அவருக்குத் தெரியும் - அவர் பந்துவீசும்போது அவரது வலது தோள்பட்டையில் அதிக அளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறார். அதனால், கேப்டன் தோனி அவரை இலங்கை அணிக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணிகளில் இருந்து விலக்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

"இது தோனி கூறிய ஒரு ஆலோசனையாகும், அதை அவர்கள் கவனிக்க வேண்டுமா என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்யும். எங்கள் அணியில் உள்ள பிசியோ மற்றும் பயிற்சியாளர் அவரது உடலை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். அதனால் அவருக்கு காயங்கள் ஏற்படாது" என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Super Kings Sports Cricket Ms Dhoni Chepauk Chennai Csk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment