Lucknow vs Mumbai Cricket Match,IPL 2023 Score Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று லக்னோவில் நடைபெற்ற 63வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.
Indian Premier League, 2023Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow 03 June 2023
Lucknow Super Giants 177/3 (20.0)
Mumbai Indians 172/5 (20.0)
Match Ended ( Day – Match 63 ) Lucknow Super Giants beat Mumbai Indians by 5 runs
நடப்பு சீசனில் லக்னோ – மும்பை அணிகள் அடுத்த சுற்றான பிளேஆஃப்-க்கு முன்னேற இன்றைய ஆட்டம் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கும் தலா 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அதில் வெற்றியை பதிவு செய்யும் அணிக்கு பிளேஆஃப் வாய்ப்பு பிரகாசமாகிவிடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடக்க வீரராக களமிறங்கிய ஹோடா 5 ரன்களிலும், டீகாக் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மன்கட் ரன் கணக்கை தொடங்காமலே பெவிலியன் திரும்பினார். இதனால் லக்னோ அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் குணால் பாண்டியா – மார்கஸ் ஸ்டொயினிஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
இருவரும் சிறப்பாக விளையாடியதால் லக்னோ அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்த நிலையில், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய குணால் பாண்டியா 42 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து காயம் காரணமாக ரிட்டயர்ஹிட் மூலம் வெளியேறினார். மறுமுனைகயில் அதிரடியாக விளையாடிய ஸ்டொயினிஸ் 47 பந்துகளில் 4 பவுண்டரி 8 சிக்சருடன் 89 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்துள்ளது. மும்பை அணி தரப்பில் பெகரிண்டஃப் 2 விக்கெட்டுகளும், சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 178 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.
தொடர்ந்து 178 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 90 ரன்கள் சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 29 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களிலும், வதோரா 16 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், அரைசதம் கடந்த இஷான் கிஷன் 39 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஷ்னு வினோத் 2 ரன்களில் வெளியேறிய நிலையில், 6-வது விக்கெட்டுக்கு டிம் டேவிட் கேமரூன கிரீன் இருவரும் மும்பை அணியின் வெற்றிக்கு முயற்சித்தனர்.
கடைசி ஓவரில் மும்பை அணிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்த ஓவரை வீசிய லக்னோ அணியின் மோஷன் கான் முதல் பந்தை டாட் பாலாகவும், அடுத்த 2 பந்துகளில் 2 ரன்களும் கொடுத்த நிலையில், 4-வது பந்தை டாட் பாலாக வீசி மும்பை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். அடுத்து 5-வது பந்தில் ஒரு ரன் எடுக்க கடைசி பந்தில் 8 தேவை என்ற நிலையில் மும்பை அணி ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் லக்னோ அணியின் வெற்றி உறுதியானது.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil