IPL 2023 auction: Date, time, venue, rules, remaining purse value in tamil: 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏலப் பட்டியலில் 132 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த வீரர்களில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கர்ரன் மற்றும் நிகோலஸ் பூரன், ஹாரி புரூக், மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், தமிழகத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஐ.பி.எல்.லில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரை பயன்படுத்தும் முறை அறிமுகமாக இருப்பதால் அதற்கு ஏற்ப வீரர்களை எடுக்க 10 அணி நிர்வாகங்களும் வியூகங்களை தீட்டுகின்றன. மொத்தம் 87 வீரர்கள் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள்.
இந்த மினி ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரூ 42.25 கோடியுடன் நுழையும், அதே நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முறையே ரூ 32.2 கோடி மற்றும் ரூ 23.35 கோடியுடன் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இதற்கு நேர்மாறாக, இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவர்களின் கையில் ரூ. 7.05 கோடியுடன் ஏலத்தில் நுழையும், ராயல் சேலஞ்சர்ஸ் ரூ. 8.75 கோடியை வைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் வசம் 20.45 கோடி உள்ளது.
ஐபிஎல் 2023 மினி ஏலம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும் இங்கே:
ஐபிஎல் 2023க்கான மினி ஏலம் எப்போது நடைபெறும்?
ஐபிஎல் 2023 மினி ஏலம் நாளை (வெள்ளிக்கிழமை - டிசம்பர் 23) நடைபெறும்.
ஐபிஎல் 2023 மினி ஏலம் எங்கு நடைபெறும்?
ஐபிஎல் 2023 மினி ஏலம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெறுகிறது.
ஐபிஎல் 2023 மினி ஏலம் எந்த நேரத்தில் தொடங்கும்?
ஐபிஎல் 2023 மினி ஏலம் இந்திய நேரப்படி நாளை மதியம் 2:30 மணிக்கு தொடங்கும்.
IPL 2023 மினி ஏலத்தை எந்த சேனல் நேரடியாக ஒளிபரப்பும்?
ஐபிஎல் 2023 மினி ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
ஐபிஎல் 2023 மினி ஏலத்தை நீங்கள் எங்கு நேரடியாக ஸ்ட்ரீம் செய்யலாம்?
இந்தியாவிலும், இந்திய துணைக்கண்டத்திலும், ஐபிஎல் 2023 மினி ஏலத்தை "ஜியோ சினிமா" தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil