Advertisment

PBKS vs RR Highlights: ஹெட்மயர் அதிரடி ஆட்டம் : ராஜஸ்தான் அணிக்கு 7-வது வெற்றி

தர்மசாலாவில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2023 Live Score | PBKS vs RR Live Score | Punjab vs Rajasthan Score

பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் 2023 ஸ்கோர்

IPL 2023, Punjab vs Rajasthan Live Cricket Match Score in Tamil 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தர்மசாலாவில் இன்று நடைபெற்ற 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது.

Advertisment

டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்; பஞ்சாப் முதலில் பேட்டிங்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் கொடுத்த ப்ரப்சிம்ரன் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய ஷிகர் தவான் 12 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அதர்வா 19 ரன்களிலும், லிவிங்ஸ்டன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த பஞ்சாப் அணிக்கு சாம் கரன், ஜித்தேஷ் சர்மா ஜோடி ஆறுதல் அளித்தது. இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஜித்தேஷ் சர்மா 28 பந்துகளில் தலா 3 பவுண்டரி சிக்சருடன் 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷாருக்கான் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. கடைசிவரை களத்தில் இருந்த சாம் கரன் 31 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 49 ரன்களும், ஷாருக்கான் 23 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

ராஜஸ்தான் அணி தரப்பில் சைனி 3 விக்கெட்டுகளும், ஸாம்பா, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 188 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால் அடுத்து களமறங்கிய தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இதனால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த படிக்கல் 30 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருன் 51 ரன்களும், ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 50 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சாம்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்தாலும் சிம்ரான் ஹெட்மயர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

19.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. சிம்ராான் ஹெட்மயர் 28 பந்துகளில் 46 ரன்களும், ரியான் பராக் 12 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி தரப்பில்’, ரபாடா 2 விக்கெட்டுகளும், சாம் கரன், அர்ஷ்தீப் சிங், ராகுல் சஹார், எல்லீஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Rajasthan Royals Punjab Kings Ipl News Ipl Cricket Live Cricket Score Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment