IPL 2023 Playoff Qualification Scenario EXPLAINED in Tamil: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 7:30 மணிக்கு நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதம் விளாசிய ஹென்ரிச் கிளாசென் 104 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 187 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பெங்களூரு அணியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய விராட் கோலி 63 பந்துகளில் சதம் விளாசினார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி சதம் அடித்தார். அவருடன் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டு பிளெசிஸ் 71 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
We’re officially in the 🔝 4. 🔥
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 18, 2023
Must win game, high pressure, odds against us? But we’ve got the Chase Master & Captain Faf. 🤷♂️#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #SRHvRCB pic.twitter.com/lxj0zUvTed
பிளேஆஃப் போட்டா போட்டி
நடப்பு சீசனில் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் பிளேஆஃப்-க்கு முன்னேறியது. மீதமுள்ள 3 இடங்களுக்கு 6 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. மேலும், நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை பெங்களூரு அணி வீழ்த்தியால் 4 அணிகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த அணிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
6️⃣th hundred for the King in the IPL and it’s come in an all important chase! 🥹
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 18, 2023
Only RCB Hall of Famer, Chris Gayle, has as many hundreds 🤌#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #SRHvRCB @imVkohli pic.twitter.com/lIVWX0YsJD
𝗖𝗹𝗮𝘀𝘀. 𝗥𝗲𝘀𝗶𝗹𝗶𝗲𝗻𝗰𝗲. 𝗣𝗲𝗿𝗳𝗲𝗰𝘁𝗶𝗼𝗻. 𝗞𝗶𝗻𝗴 𝗞𝗼𝗵𝗹𝗶 👑@imVkohli produced a chase masterclass and unleashed his best in a must-win game, leaving everyone in awe 👏#TATAIPL | #SRHvRCB | @RCBTweets pic.twitter.com/kCeT35cAIX
— IndianPremierLeague (@IPL) May 19, 2023
ஆர்.சி.பி வெற்றி – 4 அணிகளுக்கு நெருக்கடி

ஐதராபாத் அணிக்கு எதிரான பெங்களூரு அணியின் வெற்றி மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள் பிளேஆஃப்-க்குள் நுழைவதில் கடுமையான நெருக்கடி நிலவுகிறது. இந்த 4 அணிகளில் மும்பை அணி மட்டுமே 14 புள்ளிகளுடன் உள்ளது மற்ற 3 அணிகள் 12 புள்ளிகளுடன் உள்ளன.
மும்பை அணி பிளேஆஃப்-க்கு முன்னேற நல்ல நெட் ரன்ரேட்டில் அதன் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். மற்ற அணிகள் பிளேஆஃப்-க்கு முன்னேற, பெங்களூரு அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியிடம் தோற்க வேண்டும். மேலும், அந்த அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் நல்ல நெட் ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டும்.

நேற்றை ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று இருந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பிளேஃஆப்-க்குள் நுழைந்து இருக்கும். ஆனால், பெங்களூரு அணி வெற்றி பெற்று விட்டது. அந்த அணியின் இந்த வெற்றி இரு அணிக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. சென்னை மற்றும் லக்னோ அணிகள் தங்களின் கடைசி ஆட்டத்தில் வெற்றியை ருசித்தால் அவர்களின் பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாகி விடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil