IPL 2023 Playoff Scenario Explained in tamil: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், இன்று இரவு 7:30 மணிக்கு தர்மசாலாவில் நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
முக்கிய போட்டி
நடப்பு சீசனில் அடுத்த சுற்றான பிளேஆஃப் சுற்று வருகிற செவ்வாய்கிழமை (மே.23) முதல் தொடங்குகிறது. இந்த சுற்றுக்கு 10 அணிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு 6 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதும் இன்றை போட்டி மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லி அணி ஏற்கனவே பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. ஆனால், 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8வது உள்ள பஞ்சாப் அணி இன்னும் பிளேஆஃப் போட்டியில் நீடித்து வருகிறது. பஞ்சாப் அணிக்கு டெல்லி மற்றும் ராஜஸ்தானுடன் தலா ஒரு போட்டிகள் என 2 போட்டிகள் மீதம் உள்ளது. இந்த 2 போட்டியிலும் அந்த அணி நல்ல நெட் ரன்ரேட்டில் வெற்றியை ருசித்தால் பிளேஆஃப் போட்டியில் நீடிக்கும்.
Trekking across sundar views to enjoy a beautiful game of cricket 😌
Northern Derby - Round 2 👉 coming 🔜 from picturesque Dharamshala 🏔#YehHaiNayiDilli #IPL2023 #PBKSvDC @davidwarner31 pic.twitter.com/rc3iK4Vd41— Delhi Capitals (@DelhiCapitals) May 17, 2023
ஆனாலும், இந்த இரு அணிகளையும் அந்தந்த முதல் போட்டிகளில் பஞ்சாப் வென்றதால், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் பதிலடி கொடுக்க தயாராகி வருகின்றனர். டெல்லி அணி பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், ராஜஸ்தான் அணிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. எனவே, பஞ்சாப் அணியை டெல்லி வீழ்த்த வேண்டும் என்றே அவர்கள் நினைப்பார்கள். ராஜஸ்தானுடன் மற்ற 5 அணிகளும் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றிபெற வேண்டும் என்று கருதுவார்கள். அந்த 6 அணிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
பஞ்சாப் தோற்க நினைக்கும் 6 அணிகள்
புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தலா 15 புள்ளிகளுடன் முறையே 2வது மற்றும் 3வது இடங்களைப் பிடித்துள்ளன. டெல்லி அணிக்கு எதிராக சென்னையும், கொல்கத்தாவுக்கு எதிராக லக்னோவும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியுற்றால், இரு அணிகளும் அதே 15 புள்ளிகளுடன் இருப்பார்கள். இந்த அணிகளை பஞ்சாப் அணி முந்தாமல் இருக்க, அந்த அணி மீதமுள்ள 2 போட்டியில் ஒன்றில் தோல்வியுற வேண்டும். அப்படி நடந்தால், சென்னை அல்லது லக்னோ அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் தனது முந்தைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் தோல்வியடைந்தது. அதனால், தற்போது 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. மும்பை தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. அந்த ஆட்டத்திலும் அவர்கள் தோற்றால், மற்ற அணிகளும் 14 ரன்களில் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். பஞ்சாபின் நெட் ரன்ரேட் (NRR) மிக மோசமாக உள்ளதால், கடைசி இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் அவர்கள் தோல்வியுற்றால் தான் மும்பை அணி பிளேஆஃப்-க்கான போட்டியில் இருக்க முடியும்.
இதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியைப் போலவே, பெங்களூரூ அணியும் தங்களின் இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் தோல்வியுற்றால், அவர்கள் 14 புள்ளிகளுடன் முடிப்பார்கள். அவர்கள் நல்ல நெட் ரன்ரேட்டை கொண்டுள்ள நிலையில், பஞ்சாப் குறைந்தது ஒரு போட்டியையாவது தோற்க வேண்டும் என்றும் நினைப்பார்கள்.
மறுபுறம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் அதிகபட்சமாக 14 புள்ளிகளைப் பெறலாம். எனவே 7 வெற்றிகளுடன் உள்ள அணிகளின் நெட் ரன்ரேட் சிறப்பாக இருந்தால், அவர்கள் பஞ்சாப் கிங்ஸ் குறைந்தது ஒரு போட்டியையாவது தோற்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். இந்த அணிகளின் விதிகள் அவர்களின் கைகயில் இருந்து நழுவியுள்ள நிலையில், அவர்கள் தங்கள் போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், மற்ற அணிகளின் முடிவுகளும் தாங்கள் நினைத்தது போல் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால், புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள இரண்டு அணிகளான டெல்லி கேபிடல்ஸ் (பஞ்சாப் மற்றும் சென்னைக்கு எதிரான போட்டிகள்) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பெங்களூரு மற்றும் மும்பைக்கு எதிரான போட்டிகள்) அணிகள் தான், 4 அணிகளின் விதியை தங்கள் கைகளில் வைத்திருக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.