IPL 2023 Playoffs – GT vs CSK Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் முதலாவது தகுதி சுற்றில் (குவாலிஃபயர் -1 ) நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், நடப்பு சீசனில் பலம் பொருந்திய அணியாக வலம் வரும் குஜராத் அணியை எதிர்த்து மோதும் சென்னை அணிக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
குஜராத் vs சென்னை: சவால்கள்

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 14 ஆட்டங்களில் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பிளேஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற குஜராத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர வலுவாக உள்ளது.
குஜராத் அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில் (680 ரன்கள்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (289), விருத்திமான் சஹா (287), டேவிட் மில்லர் (261), விஜய் சங்கர் (287) போன்றோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். குறிப்பாக, தொடக்க வீரர் சுப்மன் கில் நடப்பு சீசனில் 2 சதங்களை விளாசி மிரட்டல் ஃபார்மில் உள்ளார். பந்து வீச்சில் ரஷித் கான் (24 விக்கெட்), முகமது ஷமி (20), மொகித் ஷர்மா, நூர் அகமது, அல்ஜாரி ஜோசப்பும் நல்ல நிலையில் உள்ளனர். ரஷித் கான் ஆல்ரவுண்டராகவும் கலக்கி வருகிறார்.

நேருக்கு நேர்
குஜராத் அணியை சென்னை இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. ஆனால் அந்த 3 ஆட்டங்களிலும் சென்னை தோல்வியுற்றுள்ளது. கடந்த சீசனில் நடந்த 2 ஆட்டங்களில் 7 மற்றும் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை குஜராத் வீழ்த்தியது. இந்தாண்டு நடந்த ஒரு ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியது. எனினும், அந்தப் போட்டிகள் எதுவும் சென்னையில் நடக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil