IPL 2023 Playoffs schedule Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், நேற்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்தன. நேற்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தோல்வியடைந்தை அடுத்து, ஐபிஎல் 2023 தொடரில் பிளேஆஃப்-க்கு முன்னேறிய அணிகளின் இடம் உறுதி செய்யப்பட்டது.
இதன்படி, புள்ளிகள் பட்டியலில் 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள குஜராத் 17 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணியுடன் மோதுகிறது. அதே நேரத்தில், பெங்களூரு அணியின் தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப்-க்கு முன்னேறவும், புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தைப் பிடிக்கவும் உதவியது. அதனால், எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2023 – பிளேஆஃப் அட்டவணை
⦿ தகுதிச் சுற்று 1 (குவாலிஃபயர் -1): குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை – மே 23, 2023 – செவ்வாய், இரவு 7:30 (இந்திய நேரப்படி)
⦿ எலிமினேட்டர்: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை – மே 24, 2023 – புதன்கிழமை இரவு 7:30 (இந்திய நேரப்படி)
⦿ குவாலிஃபையர் 2: குவாலிஃபயர் -1ல் தோல்வியடைந்த அணி v எலிமினேட்டரில் வென்ற அணி – நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் – மே 26, 2023 – வெள்ளிக்கிழமை இரவு 7:30 (இந்திய நேரப்படி)
⦿ இறுதிப்போட்டி: குவாலிஃபயர் -1ல் வென்ற அணி v குவாலிஃபயர் -2 வென்ற அணி – நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் – மே 28, 2023 – ஞாயிறு இரவு 7:30 (இந்திய நேரப்படி).
குஜராத், சி.எஸ்.கே-வுக்கு பைனலில் நுழைய 2 வாய்ப்பு

நடப்பு சீசனில் புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள குஜராத் – சென்னை அணிகளுக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய 2 வாய்ப்புகள் உள்ளன. குவாலிஃபயர் -1ல் வெற்றியை ருசிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி காணும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் குவாலிஃபையர் 2ல் மல்லுக்கட்டும். இதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் -1ல் வெற்றி பெற்ற அணியுடன் ஐ.பி.எல் 2023-க்கான இறுதிப்போட்டியில் மோதும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil