scorecardresearch

டாப் ஸ்பாட்டுக்கு மோதும் குஜராத், சி.எஸ்.கே: இதர 2 இடங்களுக்கு 4 அணிகள் கடும் போட்டி

ராஜஸ்தான் சிறந்த நெட் ரன்ரேட்டைக் கொண்டிருந்தாலும், கொல்கத்தா தனது கடைசி இரண்டு லீக் ஆட்டங்களை சொந்த மைதானத்தில் விளையாடுகிறது.

IPL 2023 playoffs scenarios explained: CSK, GT battle for top spot; what are KKR, RR, RCB, PBKS' chances? In tamil
MS Dhoni's Chennai Super Kings (CSK) are fighting with Gujarat Titans (GT) for the top spot in the IPL 2023 standings Tamil News

IPL 2023 playoffs scenarios explained Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரின் பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

தகுதிச் சுற்று 1 மே 23-ஆம் தேதி எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து மே 24-ஆம் தேதி எலிமினேட்டர் ஆட்டம் நடைபெறும். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.

பிளேஆஃப் – கடும் போட்டி

இந்நிலையில், நடப்பு சீசனில் அடுத்த சுற்றான பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற டாப்-6ல் உள்ள அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தில் வலுவாக உள்ளது. நேற்று (புதன்கிழமை) சென்னையில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் சென்னை அணி 2 புள்ளிகள் பெற்று 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. 12 புள்ளிகளுடன் மும்பை அணி 3வது இடத்தில் உள்ளது.

4வது மற்றும் கடைசி பிளேஆஃப் இடத்தை 11 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ அணி ஆக்கிரமித்துள்ளது. சிஎஸ்கேயிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வார்னர் தலைமையிலான டெல்லி அணி இந்த சீசனில் லீக் கட்டத்தில் 14 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடியும். இதனால், ஐபிஎல் 2023ல் டெல்லி கேபிடல்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு வர வாய்ப்பில்லை.

சி.எஸ்.கே பிளேஆஃப் உறுதி

நடப்பு சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப்-க்கு முன்னேற, இன்னும் மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் போதும். அந்த அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை 3:30 மணிக்கு தொடங்கும் ஐபிஎல் தொடரின் 61வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் வைத்து சந்திக்கிறது.

மே 20 அன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி அணிக்கு எதிரான சீசனின் இறுதி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த இரு போட்டிகளிலும் வெற்றியை ருசித்தால் சென்னை அணி டாப் 2 இடத்தில் இருக்கும்.

மறுபுறம், குஜராத் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் (மும்பை, ஐதராபாத், பெங்களூரு) உள்ளன. இந்த 3 போட்டியிலும் அந்த அணி வென்றால், குஜராத் தொடர்ந்து முதலிடத்திலே நீடிக்கும். தோல்வியை தழுவும் பட்சத்தில் சென்னை நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறும்.

கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகளின் பிளேஆஃப் வாய்ப்பு எப்படி?

இன்று (வியாழன்கிழமை) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன. தலா 10 புள்ளிகளை பெற்றுள்ள இந்த அணிகளில் ராஜஸ்தான் 5வது இடத்திலும், கொல்கத்தா 6வது இடத்திலும் உள்ளன. இன்றைய போட்டியில் தோற்கும் அணி அதிகபட்சமாக 14 புள்ளிகளுடன் லீக் கட்டத்தை முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோல்வியடைந்த அணி தங்களுக்குச் சாதகமாகச் செல்லும் மற்ற முடிவுகளை நம்பியிருக்க வேண்டும்.

ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் நடப்பு சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளை எடுத்துள்ளன. இந்த சீசனில் 11 ஆட்டங்களுக்குப் பிறகு கொல்கத்தா (-0.079), பெங்களூரு (-0.345) மற்றும்பஞ்சாப் (-0.441) ஆகிய அணிகளை விட ராஜஸ்தான் ராயல்ஸ் (+0.388) அணி சிறந்த நெட் ரன்ரேட்டை கொண்டுள்ளது.

ராஜஸ்தான் சிறந்த நெட் ரன்ரேட்டைக் கொண்டிருந்தாலும், கொல்கத்தா தனது கடைசி இரண்டு லீக் ஆட்டங்களை சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றியை ருசித்தால் பட்டயலில் இருந்து ராஜஸ்தான் சரிவைக் காணும். இதேபோல், இன்னும் 3 போட்டிகளில் (ராஜஸ்தான், ஐதராபாத், குஜராத்) விளையாட உள்ள பெங்களுரு அணி குஜராத்துக்கு எதிராக மட்டுமே சொந்த மைதானத்தில் ஆடுகிறது.


மும்பை வாய்ப்பு எப்படி?

மும்பை அணியைப் பொறுத்தவரை, அதன் கடைசி 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றால், புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெற முடியும். மும்பை அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வருகிற வெள்ளிக்கிழமை மும்பை வான்கடேயில் வைத்து சந்திக்கிறது. பின்னர் செவ்வாய்க்கிழமை ஏகானா ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது.

தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை மே 21 அன்று சொந்த மண்ணில் விளையாடுகிறது. பிளேஆஃப்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க மும்பை அவர்களின் நெட் ரன்ரேட்டை (-0.255) அதிகரிக்க வேண்டும்.

லக்னோ அணி பிளேஆஃப் வாய்ப்பில் நீடிக்க மீதமுள்ள 3 ஆட்டங்களில் 2ல் கண்டிப்பாக வெல்ல வேண்டும். அந்த அணிக்கு ஐதராபாத், மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகளுடன் போட்டியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2023 playoffs scenarios explained csk gt battle for top spot what are kkr rr rcb pbks chances in tamil