Advertisment

ஆரஞ்சு தொப்பி போட்டியில் ருதுராஜ், கான்வே: பவுலிங்கில் முன்னேறும் சி.எஸ்.கே இளம் வீரர்

ருதுராஜ் இப்போது 8 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 317 ரன்கள் மற்றும் 149.62 ஸ்ட்ரைக்-ரேட் எடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
IPL 2023 Points Table, Orange Cap And Purple Cap Leader Tamil News

IPL 2023 Points Table, Orange Cap And Purple Cap Leaders: Rajasthan Royals Replace Chennai Super Kings At Top, Tushar Deshpande Rises To 3rd Tamil News

IPL 2023 Points Table, Orange Cap And Purple Cap Leader Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கான லீக் ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 2 முறை வென்றது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸுக்குப் பிறகு சென்னை அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பெற்ற 3வது அணியாக ராஜஸ்தான் உருவெடுத்துள்ளது.

Advertisment
publive-image

கடந்த வியாழன் இரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதன் மூலம் ஐபிஎல் 2023 தொடருக்கான புள்ளிகள் அட்டவணையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் 8 போட்டிகளில் இருந்து தலா 10 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும், சென்னையின் நெட் ரன்ரேட்டுடன் 0.376 உடன் ஒப்பிடும்போது ராஜஸ்தான் அணியின் நெட் ரன்ரேட்டுடன் 0.939 என உயர்ந்துள்ளது. இதனால் சென்னை அணி 3வது இடத்தில் உள்ளது. மேலும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் 0.580 நெட் ரன்ரேட்டுடன் 2வது இடத்தில் உள்ளது.

தற்போது 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் கே.எல் ராகுலின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சென்னை அணியை விட முன்னேற இன்று இரவு ஷிகர் தவானின் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்த வேண்டும். பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் 6வது இடத்தில் உள்ளது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி)அணி 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

ஆரஞ்சு கேப் பந்தயத்தில் ருதுராஜ்

வியாழன் அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் நடப்பு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு கேப் பந்தயத்தில் அவர் 4வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.

ருதுராஜ் இப்போது 8 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 317 ரன்கள் மற்றும் 149.62 ஸ்ட்ரைக்-ரேட் எடுத்துள்ளார். அவர் சக சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேயை விட சற்று பின்தங்கியுள்ளார். அவர் கடந்த போட்டியில் வெறும் 8 ரன்களை எடுத்து இருந்தார். மேலும் அவர் 8 ஆட்டங்களில் 322 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

publive-image

பெங்களூரு அணியின் ஜோடியான ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி தற்போது ஆரஞ்சு கேப் பந்தயத்தில் முன்னணியில் உள்ளனர். டு பிளெசிஸ் 8 ஆட்டங்களில் 5 அரைசதங்களுடன் 422 ரன்களுடன் நம்பர் 1 இடத்தில் உள்ளார். கோலி 8 போட்டிகளில் 5 அரைசதங்களுடன் 333 ரன்கள் எடுத்துள்ளார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 77 ரன்கள் குவித்ததன் மூலம் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜெய்ஸ்வால் தற்போது 8 ஆட்டங்களில் 3 அரைசதங்களுடன் 304 ரன்கள் எடுத்துள்ளார்.

பர்பிள் கேப் பந்தயத்தில் தேஷ்பாண்டே

வியாழன் அன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டே பெங்களூரு அணியின் முகமது சிராஜ் மற்றும் குஜராத் அணியின் ரஷித் கானுடன் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களுக்கான பட்டியலில் (14 விக்கெட்டுகளுடன்) இணைந்தார். தேஷ்பாண்டே ராஜஸ்தானுக்கு எதிராக 42 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் பர்பிள் கேப் பந்தயத்தில் அவர் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இப்போது 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிராஜ் மற்றும் ரஷித் கான் முறையே 8 மற்றும் 7 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

publive-image

ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை அணிக்கு எதிராக 35 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்மூலம் அவர் என்று பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் 2022 இன் பர்பிள் கேப் வெற்றியாளரான யுஸ்வேந்திர சாஹல், வியாழக்கிழமை இரவு ஜெய்ப்பூரில் விக்கெட் இழப்பின்றி 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகளுடன் 6வது இடத்தில் நீடிக்கிறார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Super Kings Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Chennai Csk Chennai Super Kings Vs Rajasthan Royals Ruturaj Gaikwad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment