scorecardresearch

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க பெரிய வெற்றி வேண்டும்: பஞ்சாப் அணிக்கு இன்று முக்கிய போட்டி

இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி, 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் பிளேஆஃப்-க்கான பந்தயத்தில் உள்ளனர்.

IPL 2023: Punjab Kings eye big win to keep playoff hopes alive vs Delhi Capitals Tamil News
PBKS vs DC IPL 2023: Punjab Kings take on Delhi Capitals

Punjab Kings (PBKS) and Delhi Capitals (DC) will clash in the 64th match of the Indian Premier League 2023 at the HPCA  Stadium, Dharamsala Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், இன்று இரவு 7:30 மணிக்கு தர்மசாலாவில் நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

பிளேஆஃப்-க்கு முன்னேறுமா பஞ்சாப்?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்று அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் கடைசியாக 2014ல் தான் பிளேஆஃப்-க்குள் சென்றது. இறுதிப்போட்டியில் கொல்கத்தாவிடம் சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தது. 2015 முதல், பஞ்சாப் 14 லீக் ஆட்டங்களில் இரண்டு முறை மட்டுமே 7 ஆட்டங்களில் வென்றுள்ளனர்.

அவ்வகையில், நடப்பு சீசனில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி , அதில் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் பிளேஆஃப்-க்கான பந்தயத்தில் உள்ளனர். புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, அங்கிருந்து முன்னேற பெரிய அளவில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

பஞ்சாப் அணி தனது எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால், அவர்கள் 16 புள்ளிகளைப் பெறலாம். அதன்மூலம், அடுத்த சுற்றான பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். அத்துடன் பஞ்சாப் அணி (-0.268) ரன்-ரேட்டிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

டெல்லியை சாய்க்குமா பஞ்சாப்?

டெல்லி அணியை முந்தைய ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஷிகர் தவானின் பஞ்சாப் அணி அதே நம்பிக்கையுடன் இன்றைய ஆட்டத்திலும் களமிறங்கும். அந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் சதம் விளாசி மிரட்டி இருந்தார். இதேபோல், பந்துவீச்சில் ஹர்ப்ரீத் ப்ரார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசையில் கேப்டன் தவான், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான் போன்றோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் ககிசோ ரபாடா மற்றும் சாம் கர்ரான் நல்ல நிலையில் உள்ளனர். அர்ஷ்தீப் சிங் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும், முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். தவிர, ஹர்ப்ரீத் ப்ரார், நாதன் எல்லிஸ் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் நிலையான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். ரபாடா ஐபிஎல்லில் டேவிட் வார்னரை மூன்று முறை ஆட்டமிழக்க செய்துள்ளார்.

மறுபுறம், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வி என 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த டெல்லி அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டு எழுச்சி பெற்றது. ஆனால் அதன் பிறகு கடந்த 2 ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. தவான் மற்றும் லிவிங்ஸ்டோனை தலா இரண்டு முறை ஆட்டமிழக்க செய்த இஷாந்த் சர்மா திறமையான போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் – டெல்லி அணிகள் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டங்களில் பஞ்சாப்பும், 15 ஆட்டங்களில் டெல்லியும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்

பஞ்சாப்

பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா.

டெல்லி

டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ரோவ்மன் பவல்/அன்ரிச் நோர்ட்ஜே, அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், பிரவீன் துபே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது, முகேஷ் குமார், மணீஷ் பாண்டே.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2023 punjab kings eye big win to keep playoff hopes alive vs delhi capitals tamil news