ஐ.பி.எல் 2023-ம் ஆண்டுக்காண அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அனைத்து அணிகளும் தலா ஏழு போட்டிகள் சொந்த ஊரிலும் வெளியிலும் விளையாட உள்ளன.
Advertisment
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2023-ம் ஆண்டுக்கான அட்டவணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி மார்ச் 31-ம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங் அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஐ.பி.எல் தொடரில் அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகள் சொந்த ஊரிலும் வெளியிலும் விளையாட உள்ளன.
அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 மைதானங்கள் போட்டிகள் நடைபெற உள்ளன
ஐ.பி.எல் 2023-ம் ஆண்டுக்கான அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில்: மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.
பி பிரிவில்: சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஐபிஎல் 2023 போட்டிகள் அட்டவணை:
முன்னதாக, மகளிர் ஐ.பி.எல் 2023-ம் ஆண்டுக்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டது. WPL முதல் போட்டி மார்ச் 4-ம் தேதி டி.ஒய் பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். இறுதிப் போட்டி மார்ச் 26-ம் தேதி பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும்.
WPL அட்டவணை 2023 பிளேஆஃப் மற்றும் ஐபிஎல் 2022 இறுதிப் போட்டிக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"