IPL 2023 - Shubman Gill - GT vs RCB Tamil News: 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று இரவு 7.30 மணிக்கு பெங்களுருவில் நடந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 197 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 198 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணி 19.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இதனால் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 104 ரன்கள் வரை குவித்து மிரட்டினார்.
It begins now 💙⚡️ pic.twitter.com/8Iwe0bRFJx
— Shubman Gill (@ShubmanGill) May 21, 2023
இந்த தோல்வி காரணமாக பிளே ஆஃப் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்தது. மறுபுறம், மும்பை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமானது. ஆனால், பெங்களூரு அணி 8வது முறையாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியும், 16வது முறையாக சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தும் உள்ளது.
சாபம் - கொலை மிரட்டல்
இந்நிலையில், பெங்களூரு அணியின் பிளே ஆஃப் கனவை தகர்த்ததில் முக்கிய வீரராக இருந்த ஷுப்மன் கில்லிற்கு பெங்களூரு அணி ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும், அவரது மரணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது, ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய காரை காரின் புகைப்படத்தை பதிவிட்டு இது போன்று உங்களது காரையும் தீக்கரையாக்குவோம் என்று குறிப்பிடுவது, உங்களை காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் என்றெல்லாம் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இவ்வளவு ஏன், இனிமேல் உங்களது வாழ்க்கையில் நடக்கும் எல்லா அசம்பாவிதங்களுக்கும் எங்களது வேண்டுதல் தான் காரணமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். அதோடு, ஷுப்மான் கில்லின் சகோதரி ஷானீல் கில்லை திருநங்கை என்று முத்திரை குத்தி சமூக ஊடகங்களில் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.