IPL 2023, Chennai Super Kings’ skipper M.S. Dhoni Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.
தோனி பேச்சு

Photo credit: R. Pugazh Murugan
இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி, “இது தான் எனது வேலை. நான் செய்ய வேண்டியது இதுதான். என்னை ரன்கள் நிறைய ஓட வைக்க வேண்டாம் என்று அவர்களிடம் சொன்னேன். அது தற்போது வேலை செய்கிறது. நான் செய்ய வேண்டியதும் இதுதான். அணிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி.” என்று கூறி இருந்தார்.
காயம்
நடப்பு சீசன் தொடங்கும் முன் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு இருந்தது. அந்த காயத்துடன் போட்டிகளில் விளையாடி வந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சையை அவர் எடுத்துக் கொண்டு வருவதாகவும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்திருந்தார்.

Photo credit: R. Pugazh Murugan
இந்த நிலையில், தோனி தனக்கு காயம் இருப்பதையும், அதனால் அவர் ரன்களை ஓடி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தனது காயத்தில் இருந்து விரைவில் மீள வேண்டும் என்பதே சென்னை அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil