scorecardresearch

குமுதா ஹேப்பி அண்ணாச்சி… இணையத்தை தெறிக்க விடும் ஐதராபாத் அணி மீம்ஸ்!

ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகளுக்கு இடையான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்கள் பற்றிய கலக்கல் மீம்ஸ்கள்.

IPL 2023, SRH vs RR Best memes from the game Tamil News
Funny memes after SRH's victory in dramatic last-ball thriller vs RR in IPL 2023 Tamil News

IPL 2023, Rajasthan Royals vs Sunrisers Hyderabad Match 52, Best memes from the game Tamil News: ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்த 52வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் 95 ரன்களும் (59 பந்துகள் – 10 பவுண்டரிகள் – 4 சிக்சர்கள்), கேப்டன் சஞ்சு சாம்சன் 66 ரன்களும் ( 38 பந்துகள் – 4 பவுண்டரி – 5 சிக்சர்) எடுத்தனர். தொடர்ந்து 215 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஐதராபாத் அணியில் அமொல்பிரீத் சிங் 33 ரன்களும், அபிஷேக் 55 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ராகுல் திரிபாதி 47 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 25 ரன்களும் எடுத்தனர்.

ஐதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை சந்தீப் சர்மா வீசினார். கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டபோது, அப்துல் சமத் பேட்டிங் செய்தார். அவர் கடைசி பந்தை வீச அந்த பந்து கேட்ச் ஆக மாறியது. இதனால், ராஜஸ்தான் வெற்றிபெற்றதாக அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடினர்.

ஆனால், கடைசி பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதனால், 1 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்துல் சமத் பேட்டிங் செய்தார். சந்தீப் சர்மா கடைசி பந்தை வீச அந்த பந்தை அப்துல் சமத் சிக்சருக்கு விளாசினார். இதனால், ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தில் ஐதராபாத் திரில் வெற்றிபெற்றது.

கலக்கல் மீம்ஸ்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து அபார வெற்றியை பதிவு செய்து நிலையில், இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர். அவை இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2023 srh vs rr best memes from the game tamil news

Best of Express