Advertisment

வச்ச குறி தப்பாது... சொல்லி வைத்தது போல் மிட்செலை தூக்கிய சி.எஸ்கே!

அண்மையில் இந்தியாவில் உலகக்கோப்பை தொடரில் அசத்திய இளம் வீரரான நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி ரூ. 1.80 கோடிக்கு வாங்கியது.

author-image
WebDesk
New Update
 IPL 2024 auction Chennai Super Kings Players CSK 2024 picked players list in tamil

ஐ.பி.எல். 2024 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி தூக்கிய வீரர்களின் பட்டியல்

 IPL 2024 auction Chennai Super Kings: 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் இன்று செவ்வாய்க்கிழமை துபாயில் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது. 

Advertisment

ஐ.பி.எல். ஏலப் பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 116 வீரர்கள் மட்டும் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் பெற்றவர்கள்.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் அதிரடியாக வீரர்களை வாங்கிக் குவித்துள்ளது. அண்மையில் இந்தியாவில் உலகக்கோப்பை தொடரில் அசத்திய இளம் வீரரான நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி ரூ. 1.80 கோடிக்கு வாங்கியது.

தொடர்ந்து, இந்திய ஆல்-ரவுண்டர் வீரரான ஷர்துல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு சென்னை அணி  வாங்கியது. இதன்பிறகு, நியூசிலாந்து வீரரான டேரில் மிட்செலை ரூ. 14 கோடிக்கு சென்னை அணி அதிரடியாக வாங்கி அசத்தியது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

IPL 2024 Auction Chennai Super Kings
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment