IPL 2024 | CSK vs RCB | Chennai Super Kings vs Royal Challengers Bangalore predicted playing 11: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் 2024) டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணியின் நீண்ட கால கேப்டனான எம்.எஸ் தோனி தனது கேப்டன்சி பொறுப்பை அதிரடித் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் வசம் ஒப்படைத்துள்ளார். ஆனாலும், தோனி அணிக்கு பக்க பலமாக இருந்து வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) முன்தைய (ஐ.பி.எல் 2023) சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியில் வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
தற்போது, ஐ.பி.எல் 2024 சீசனிலும் சாம்பியன் பட்டத்தை வென்று ரசிகர்களுக்கு விருந்து படைக்க தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும், கடந்த சீசனில் கோப்பை வென்ற அதே உற்சாகத்துடன் அணியின் வீரர்கள் களமாடுவார்கள். அதேநேரத்தில், ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கோப்பை வெல்லாத பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, அதன் கோப்பை தேடலுக்கு முடிவு கட்டும் நம்பிக்கையுடன் தொடரில் நுழைகிறது.
சென்னை அணி பேட்டிங் வரிசையில் எம்.எஸ் தோனி, அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, போன்ற வீரர்கள் உள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சில் தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேக, சிமிஷாந்த் சிங், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷர்துல் தாக்கூர் ஆகிய வீரர்கள் மிரட்ட உள்ளனர்.
பெங்களூரு அணியில் முகமது சிராஜ், அல்ஜாரி ஜோசப், ரீஸ் டாப்லி, மற்றும் ஆகாஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன் போன்ற வீரர்கள் வேகப்பந்துவீச்சில் தாக்க உள்ளனர். பேட்டிங்கில் விராட் கோலி, கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் போன்றோர் கை கொடுப்பார்கள். சுழற்பந்து வீச்சுக்கு கர்ண் சர்மா வருவார்.
இரு அணி உத்தேச ஆடும் 11 வீரர்கள் பட்டியல்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், மகேஷ்தீக்ஷனா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கர்ன் ஷர்மா, ரீஸ் டோப்லி, மொஹம்மத் சிப்லி, ஆகாஷ்தீப்.
இரு அணி வீரர்கள் பட்டியல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர், விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் குர்ரன், லாக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்எஸ் தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிந்து சிமிஷாந்த் சிங். பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தாபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி.
காயமடைந்த வீரர்கள்: டெவோன் கான்வே, மதீஷா பத்திரனா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.