Advertisment

CSK vs RCB: 10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்: அஸ்வின் கோரிக்கை; ரசிகர்கள் கடும் அதிருப்தி

சி.எஸ்.கே. - ஆர்.சி.பி போட்டிக்கு டிக்கெட் கிடைக்காத நிலையில், இரு அணி ரசிகர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக, சென்னை அணியின் ஆர்மியாக வலம் வரும் சென்னை ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

author-image
WebDesk
New Update
IPL 2024 CSK vs RCB ticket booking  fans frustrated Tamil News

பேடிஎம் செயலியில் சில தொழிற்நுட்ப கோளாறு காரணமாக 12 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai Super Kings | Ms Dhoni | CSK vs RCB | IPL 2024: 17வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான முதற்கட்ட  அட்டவணை வெளியாகிய நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணி ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.பி.சி) அணியுடன் மல்லுக்கட்டுகிறது. 

Advertisment

இந்த நிலையில் சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான டிக்கெட் விக்கெட் விற்பனை இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. நேரடி டிக்கெட் விற்பனை கிடையாது என்பதால், பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற முயற்சித்தனர். பேடிஎம், இன்சைடர் மற்றும் சி.எஸ்.கே. இணையதள பக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. சி.எஸ்.கே. இணையதள பக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. 

இதற்கிடையில், பேடிஎம் செயலியில் சில தொழிற்நுட்ப கோளாறு காரணமாக 12 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது. அதில் டிக்கெட் புக் செய்ய முயன்றபோது, முதலில் உள்ளே வருபவர்களுக்கு முன்னிலை என்ற அடிப்படையில் க்யூ முறை பின்பற்றப்பட்டது. அதில் மொத்தமே 18 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதனால் ரசிகர்கள் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

சி.எஸ்.கே. - ஆர்.சி.பி போட்டிக்கு டிக்கெட் கிடைக்காத நிலையில், இரு அணி ரசிகர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக, சென்னை அணியின் ஆர்மியாக வலம் வரும் சென்னை ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். மொத்தமுள்ள 38 ஆயிரம் டிக்கெட்டுகளில் யார் யாருக்கு எவ்வளவு டிக்கெட் பகிர்வு என்பது குறித்து சி.எஸ்.கே தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் பேசிய வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அஸ்வின் கோரிக்கை 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. அவரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்

 இதுதொடர்பாக அஸ்வின், தனது எக்ஸ் பக்கத்தில்,'சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளுக்கு அதிகபடியான டிமாண்ட் உள்ளது. எனது மகள்கள் இருவரும் தொடக்க விழா மற்றும் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள். சென்னை அணி நிர்வாகம் உதவி செய்யவும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Chennai Super Kings Ms Dhoni Csk Vs Rcb IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment