Advertisment

கம்மின்ஸ் முதல் முஸ்தாபிசுர் வரை: ஸ்லோ கட்டர் பந்துகளை முக்கிய ஆயுதமாக பவுலர்கள் மாற்றியது எப்படி?

முஸ்தாபிஸூர் ரஹ்மானைத் தவிர, பேட் கம்மின்ஸ், ட்ரெண்ட் போல்ட், ஜெய்தேவ் உனட்கட், ஆண்ட்ரே ரஸ்ஸல், கலீல் அகமது, ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் இதுவரை மெதுவான பந்துவீச்சை பயன்படுத்தியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
IPL 2024 From Pat Cummins to Mustafizur Rahman How slower cutters into the pitch have become a key weapon Tamil News

பேட்டிங் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், இந்த ஆஃப் கட்டர்கள் மிகவும் சவாலானவை.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Pat Cummins | Mustafizur Rahman: ஐ.பி.எல். 2024 தொடரில் திங்கள்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் போது, கொல்கத்தா வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் சென்னை வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் வீசிய 18-வது ஓவரை எதிர்கொள்ள தயாரானார். அவருக்கு வீசப்பட இருந்த பந்துகள் பற்றி ஆச்சரியமில்லை. இந்த சீசனில் ஏற்கனவே 10 சிக்ஸர்களை அடித்த மற்றும் 212.96 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்ட ஒரு பேட்ஸ்மேனுக்கு எதிராக முஸ்தாபிசுர் மெதுவாக வேகத்தில் பந்து வீசுவதை நம்பியிருப்பார் என்று கூறப்பட்டது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

Advertisment

ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாகவும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியதாகவும் இருந்திருக்க வேண்டிய ஐ.பி.எல்-லில், இந்த மெதுவான பந்து வீச்சுகள் (ஸ்லோயர் பந்துகள்), குறிப்பாக ஆடுகளத்தில் அடித்து வீசப்படும் ஸ்லோயர் கட்டர்கள், பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை விரட்டுவதை சவாலாக ஆக்குகிறது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: From Pat Cummins to Mustafizur Rahman: How slower cutters into the pitch have become a key weapon in IPL 2024

இது பற்றி கடந்த காலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த லக்ஷ்மிபதி பாலாஜி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், "மிடில் மற்றும் என்ட் ஓவர்களில் பழைய பந்தைக் கொண்ட ஆஃப் கட்டர்கள் மிகவும் எளிது. இடது கை வீரர்களுக்கு எதிராக, இது ஒரு தாக்குதல் பந்து வீச்சாக மாறும். ஏனென்றால் நீங்கள் பந்தில் அதன் வேகத்தை குறைக்கவில்லை. ஆனால் அது பேட்ஸ்மேன்கள் எட்டி அடிப்பதில் இருந்து விலகிச் செல்கிறது. உங்களுக்கு விக்கெட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வலது கை வீரர்களுக்கு எதிராக, இது ஒரு சிறந்த தற்காப்பு விருப்பமாகும். இது ஹிட்டிங் ஆர்க்கில் வரும் என்றாலும், வேகம் இல்லாததால் பேட்ஸ்மேனுக்கு அட்ஜஸ்ட் செய்ய குறைந்த நேரமே கிடைக்கும். அவர் பவராக அடிக்கப்படாவிட்டால், அதை நடுநிலையாக்குவது கடினம்." என்று கூறுகிறார். 

அந்த ஓவரில், முஸ்தாபிஸூர் 7 பந்துகளை ரஸ்ஸலுக்கு வீசினார் (ஒரு நோ-பால் மற்றும் ஒரு வைட்) அதில் நான்கு பந்துகள் ஃபுல்லென்த்தில் இருந்தன. அவற்றில் 3 ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே தரையிறங்கி, அவரை தனது பேட்டை நீட்டும்படி கட்டாயப்படுத்தின. மீதமுள்ள 4 பந்துகள் கட்டர்களாக இருந்தன. இது பிட்ச்சிங்கிற்குப் பிறகு, ஏற்கனவே பவராக அடிக்க தயாராக இருந்த பேட்ஸ்மேனிடமிருந்து விலகிச் சென்றது. ரஸ்ஸல் பவுண்டரி விளாசிய ஒரு பந்து மட்டும் ஓரளவு ஸ்டம்புகளின் லைனில் தரையிறங்கியது.

முஸ்தாபிஸூர் ரஹ்மானைத் தவிர, பேட் கம்மின்ஸ், ட்ரெண்ட் போல்ட், ஜெய்தேவ் உனட்கட், ஆண்ட்ரே ரஸ்ஸல், கலீல் அகமது, ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் இதுவரை மெதுவான பந்துவீச்சை பயன்படுத்தியுள்ளனர். வைட் யார்க்கர்கள் மற்றும் ஃபுல்லென்த் மெதுவான பந்துகளை வீசுவதில் ரிஸ்க் இருக்கிறது. இதேபோல், கையின் பின்புறம் (பேக் ஆஃப் தி ஹேண்ட்) கொண்டு வந்து வீசும் மெதுவாக பந்துகளை செயல்படுத்துவதில் கடினமாக உள்ளது. அதேநேரத்தில், ஆடுகளத்தில் ஆஃப்-கட்டர்கள் வீசப்படுவது முக்கிய டெலிவரியாக மாறிவிட்டன.

“மோஹித் சர்மா தவிர வேறு யாரும் கையின் பின்புறம் கொண்டு வந்து வீசும் பந்துகளை வீசுவதில்லை, ஏனென்றால் அதைச் செயல்படுத்துவது கடினம். பேட் கம்மின்ஸ் போன்ற ஒருவர், வழக்கமாக மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்துவீசினால், ஆட்டத்தை மாற்றாமல் ஆஃப் கட்டர்களை பந்துவீச முடியும். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அவற்றைப் பயன்படுத்துவதில் அவர் மிகவும் வெற்றிகரமாக இருந்தார். ஆஃப்-கட்டர்கள் மூலம், நீங்கள் மணிக்கட்டுகளைப் பயன்படுத்துவதால், நீங்கள் நல்ல கட்டுப்பாட்டையும் பெறுவீர்கள், ”என்று பாலாஜி விளக்குக்கிறார். 

இதில் முக்கியமாக, உயரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த கட்டர்களை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, சென்னை அணியானது ஃபுல்லென்த் கொண்ட அகலமாக வீசப்படக் கூடிய மெதுவான பந்து வீச்சுகளை நம்பியுள்ளது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு டீப் கவரில் பீல்டர்களை நிறுத்தி பந்தை தடுக்க உதவுகிறது. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் மெதுவான பந்து வீச்சுகளில் மாஸ்டர் என அழைக்கப்படும் டுவைன் பிராவோ அவர்களின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தாலும், முஸ்தாபிசூரைத் தவிர மற்றவர்கள் கட்டர்களைப் பயன்படுத்தாததற்கு ஒரு காரணம் இருக்கிறது.

"போட்டியில் ஏற்கனவே ஆடுகளத்திற்குள் வீசப்பட்ட நிறைய மெதுவான பந்து வீச்சுகளை நாம் பார்த்திருக்கிறோம். இது ரொம்பவே சீக்கிரம் என்பேன். நாங்கள் கண்டுபிடித்த ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் உயரமான பந்துவீச்சாளர்கள். உதாரணத்திற்கு டெல்லியை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் ஒரு குறிப்பிட்ட லென்த்தை ஆடுகளத்திற்குள் அடிப்பார்கள், அதே மாதிரியான உயரம் இல்லாததால் வித்தியாசமாக செய்ய வேண்டிய நம் வீரர்களை விட இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதையே பேட் கம்மின்ஸ் மற்றும் எஸ்.ஆர்.ஹெச் அணியின் பந்துவீச்சு தாக்குதலுக்கும் நாம் கூறலாம். அவர்கள் உயரமானவர்கள். ஆனால் எதிரணியினரைப் பேச வைக்கும் வகையில் மெதுவாக பந்து வீசுவது மிகவும் முக்கியம். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இதனை அவர்களின் தலையில் ஏற்ற வைப்பது தான் ”என்று சென்னை அணியின் உதவி பயிற்சியாளரும், 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான சைமன்ஸ் கூறினார்.

பேட்டிங் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், இந்த ஆஃப் கட்டர்கள் மிகவும் சவாலானவை. ஃபுல் ஸ்லோயர் பந்துவீச்சுகள் ஆரம்பத்தில் எடுக்கப்பட்டால் குறைந்தபட்சம் நேராக அடிக்க முடியும் என்றாலும், பேட்ஸ்மேன்கள் கட்டர்களை மிகவும் கடினமாகக் கருதுகின்றனர். அதனை அடித்து விரட்டக் கூடிய ரியாக்சான் நேரம் இருந்தபோதிலும், குறிப்பாக ஆடுகளத்தில் பிட்ச் ஆனா பிறகு வேகம் இல்லாததால் பேட்ஸ்மேன்களின் வீச்சு குறைக்கப்படுகிறது. அதற்கு ஸ்கூப்கள் மற்றும் ரிவர்ஸ்-ஸ்கூப்கள் நடுநிலையான ஷாட்களாக உள்ளன. 

“நீங்கள் ஒரு பவர்-ஹிட்டராக இருக்கும்போது, ​​அனைவருக்கும் பேட் மீது வேகம் பிடிக்கும். ஒவ்வொரு பரிமாணமும் நிபந்தனையும் ஒரு பந்து வீச்சாளர் என்ன வழங்குவார் என்பதை தீர்மானிக்கும். உங்களிடம் பெரிய பவுண்டரிகள் இருக்கும் போது, மெதுவான பவுன்சர் உதவுகிறது. எல்லோரும் பந்து வீசக்கூடிய ஒன்று அல்ல, உயரமானவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார்கள். இந்த மெதுவான பந்துகள் பேட்ஸ்மேன்களின் மனதில் சந்தேகத்தை உருவாக்குகின்றன, ”என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறினார்.

இருப்பினும், கடைசியாக பாலாஜி கூறுவது: “பாருங்கள், டி20-களில் எந்தப் பந்து வீச்சும் பாதுகாப்பான வழி அல்ல, ஏனெனில், அதனை அடித்து விரட்ட பேட்ஸ்மேன்கள் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். கட்டர்கள் இருந்தாலும், பவர்-ஹிட்டர்கள் எளிதாக சிக்ஸர் அடிக்க முடியும். முக்கிய விஷயம் அதன் ஏமாற்றத்தில் உள்ளது." என்கிறார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pat Cummins IPL 2024 Mustafizur Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment