கப்ப சி.எஸ்.கே பேர்லே எழுதுங்கோ... சென்னையில் ஐ.பி.எல். 2024 ஃபைனல்!

குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
IPL 2024 Full Schedule announced Final in Chennai on May 26 Tamil News

நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2-வது கட்ட போட்டிகள் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 Complete Schedule released: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக 17 நாட்களுக்கான அட்டவணை மட்டும் ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டது. 

Advertisment

ஐபிஎல் 2024 முழு அட்டவணையை இந்த லிங்கில் பார்க்கலாம்

அந்த அட்டவணை படி, 21 போட்டிகள் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2-வது கட்ட போட்டிகள் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 

2-வது கட்டத்தின் முதல் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. லீக் போட்டிகள் மே 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளன. பிளே-ஆப் சுற்றில் குவாலிபயர் மே 21 ஆம் தேதியும், எலிமினேட்டர் 22 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 

Advertisment
Advertisements

ஐபிஎல் 2024 முழு அட்டவணையை இந்த லிங்கில் பார்க்கலாம்

குவாலிபயர் 2 மே 24 ஆம் தேதியும், இறுதிப்போட்டி மே 26 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. மேலும் குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2024 முழு அட்டவணையை இந்த லிங்கில் பார்க்கலாம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

IPL 2024

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: