IPL 2024 Match 33 Punjab Kings vs Mumbai Indians Score Updates: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.
ஆங்கிலத்தில் படிக்க: PBKS vs MI Live Score, IPL 2024
2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 33 ஆவது போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சண்டிகர் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம்
பஞ்சாப் கிங்ஸ்: ரிலீ ரோசோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் கரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, ஸ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா
மும்பை பேட்டிங்
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் களமிறங்கினர். ரோகித் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் ஆடிய இஷான் 8 ரன்களில் வெளியேறினார். அவர் ரபாடா பந்தில் ஹர்பிரீத்திடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து ரோகித் உடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். ரோகித் 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 3 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். ரோகித், சாம் கரன் பந்தில் ஹர்பிரீத்திடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்து திலக் வர்மா களமிறங்கி சற்று அதிரடி காட்டினார். மறுமுனையில் ஆடி வந்த சூர்யகுமார் அரை சதம் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சூர்யகுமார் 53 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் சாம் கரண் பந்தில் பிரப்சிம்ரனிடம் கேட்ச் கொடுத்தார். சூர்யகுமார் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் விளாசினார். இதனையடுத்து களமிறங்கிய பாண்டியா 10 ரன்களிலும் டேவிட் 14 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த் ஷெப்பர்டு 1 ரன்னில் அவுட் ஆனார். மூவரின் விக்கெட்டையும் ஹர்ஷல்படேல் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய நபி ரன் எதுவும் எடுக்காமல், கடைசி பந்தில் டக் அவுட் ஆனார். திலக் 34 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்ஷல்படேல் 3 விக்கெட்களையும், சாம் கரண் 2 விக்கெட்களையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த ஐ.பி.எல்லில் தலா போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தலா 4 புள்ளிகளுடன் முறையே 8 மற்றும் 9 ஆம் இடங்களில் உள்ளன. எனவே இந்தப் போட்டியில் வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டும்.
இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 16 முறையும் பஞ்சாப் அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“