Advertisment

அதிகாரப்பூர்வமாக வெளியேறிய மும்பை: ஹர்திக் செயல்பாடு பற்றி கேள்வி எழுப்பும் அணி சீனியர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த வீரர்கள், கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அவரின் கேப்டன்சி பற்றி டிரஸ்ஸிங் ரூமில் சலசலப்பு நிலவுகிறது.

author-image
WebDesk
New Update
IPL 2024  Mumbai Indians seniors question team functioning Hardik Pandya Tamil News

இந்திய நட்சத்திரங்களான ரோகித், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மும்பை அணியின் பயிற்சி ஊழியர்கள் சந்தித்ததாக அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Mumbai Indians | Hardik Pandya: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே - ஆஃப்க்கு தகுதி பெறாமல் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. இது மும்பை அணி ரசிர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Mumbai Indians seniors question team functioning under Hardik Pandya

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த வீரர்கள், கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி பற்றி டிரஸ்ஸிங் ரூமில் சலசலப்பு நிலவுகிறது என்று அண்மையில் மும்பை அணியின் முக்கிய வீரர்கள் சமீபத்தில் பயிற்சி ஊழியர்களிடம் தெரிவித்ததை இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது. 

இதுகுறித்து மும்பை அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், இது கேப்டன்சி நெருக்கடி இல்லை என்றும், ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ரோகித்தின் கேப்டனாகப் பழகிய ஒரு அணி, திடீர் கேப்டன்சி மாற்றத்துடன் இன்னும் ஒத்துப் போகவில்லை என்பதற்கான அறிகுறி என்றும் தெரிவித்துள்ளார். "கேப்டன்சி மாற்றத்தைக் காணும் அணிக்கு இவை வழக்கமான  பிரச்சனைகள் தான். விளையாட்டில் இது எல்லா நேரத்திலும் நடக்கிறது, ”என்று அவர் கூறினார்.

ஒரு ஆட்டத்தைத் தொடர்ந்து வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் சந்தித்ததாக அறிந்தவர்கள் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது மும்பை அணியில் உள்ள இந்திய நட்சத்திரங்களான ரோகித், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இருந்ததாக தெரிவித்துள்ளனர். உணவருந்தும்போது, ​​அவர்கள் தங்கள் எண்ணங்களை முழுவதுமாக வெளிப்படுத்தி, அணி சரியாகச் செயல்படாததற்கான காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர். பின்னர் குறிப்பிட்ட சில மூத்தவர்களுக்கும் அணி நிர்வாகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகள் ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.

திலக் வர்மா ஃப்ளாஷ் பாயிண்ட்

டெல்லி கேப்பிட்டல்ஸிடம் தோல்வியடைந்த பிறகு பேசிய கேப்டன் ஹர்திக், "போட்டி பற்றிய விழிப்புணர்வு" இல்லாததற்காக அணிக்காக அதிக ரன்களை எடுத்த திலக் வர்மாவை சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது.

"அக்சர் படேல் (டெல்லி பந்துவீச்சாளர்) இடது கை பேட்ஸ்மேனுக்கு (திலக்) பந்துவீசும்போது, ​​அவர் அவரது பந்துவீச்சை அடித்து நொறுக்கி இருக்க வேண்டும். அது தான் சிறந்த வழி. நாங்கள் தவறவிடக் காரணம் போட்டி பற்றிய விழிப்புணர்வு இல்லாமை தான் என நான் நினைக்கிறேன். முடிவில், நாங்கள் ஆட்டத்தில் தோல்வியுற்றோம்.என்று கேப்டன் ஹர்திக் கூறினார். 

மும்பை அணியின் தோல்விக்கு இப்படி ஒரு வீரரை மட்டும் குற்றம் சாட்டுவது டிரஸ்ஸிங் ரூமில் சலசலப்பை ஏற்படுத்தியதாக விஷயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். 

போட்டியைப் பற்றி கருத்து தெரிவிக்கும் வல்லுநர்கள், இந்த சீசனில் மும்பை அணியில் ஏதோ தவறு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், மும்பை அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என்று கூறும் அளவிற்கு சென்றது. "டிரஸ்ஸிங் ரூமில் அணி இரண்டாக பிரிந்து இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்களுக்கு ஏதோ வேலை செய்யவில்லை. அவர்கள் ஒன்றாக விளையாடவில்லை, அவர்கள் ஒரு அணியாக செயல்படவில்லை, ”என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த சீசனைப் பற்றி எடுத்துக்கொள்வதாகவும், தேவைப்பட்டால், அணியின் எதிர்காலம் குறித்த முடிவை எடுப்பதாகவும் மும்பை அணியின் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள். 

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், நடப்பு சீசனில் 9-வது இடத்தில் பின்தங்கிய நிலயில் உள்ளது. இந்த சீசனுக்கு முன்னதாக, அணி 5 ஐ.பி.எல் பட்டங்களை வெல்ல உதவிய இந்திய அணியின் தற்போதைய கேப்டனான ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினர். இந்த முடிவு மும்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய சூழலில், இந்த தொடரின் ஆரம்ப போட்டிகளின் போது கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mumbai Indians Hardik Pandya IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment