IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லீக் சுற்றில் இன்னும் 7 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அடுத்த சுற்றான பிளே-ஆஃப்க்கு ஒரே ஒரு அணி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) மட்டுமே அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் மீதமுள்ள 3 இடங்களுக்கு போட்டியிடுகின்றன. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிளே-ஆஃப் சுற்றில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2024 playoffs tickets go live: How to buy IPL match tickets for knockout stages
பிளே-ஆஃப் சுற்றில், குவாலிஃபயர் 1 செவ்வாய், மே 21) மற்றும் எலிமினேட்டர் (செவ்வாய், மே 22) போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். அதே வேளையில், குவாலிஃபயர் 2 (மே 24, வெள்ளி) மற்றும் ஐ.பி.எல் இறுதிப் போட்டி (ஞாயிற்றுக்கிழமை, மே 26) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஐ.பி.எல் 2024 பிளே-ஆஃப் சுற்று போட்டி டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி?
இந்த நிலையில், பிளே-ஆஃப் சுற்றில் நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து அறிவிப்பை ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐ.பி.எல் பிளேஆஃப் சுற்றுக்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் ஏஜென்சியாக பே.டி.எம்-யை (Paytm) பி.சி.சி.ஐ நியமித்துள்ளது.
ரூபே கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இன்று செவ்வாய்கிழமை (மே 14) ஐ.பி.எல் குவாலிஃபையர் 1 (21 மே அகமதாபாத்தில்), எலிமினேட்டர் (22 மே அகமதாபாத்தில்), மற்றும் குவாலிஃபையர் 2 (சென்னையில் மே 24) போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான பிரத்யேக அனுமதியைப் பெறுவார்கள்.
ரூபே கார்டு வைத்திருப்பவர்கள் மே 26 அன்று சென்னையில் நடைபெறும் 2024 இறுதிப் போட்டிக்கான ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய மே 20 அன்று பிரத்யேக அனுமதியைப் பெறுவார்கள்.
குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 க்கான பிரத்தியேகமற்ற கட்டம் 1 ஐபிஎல் போட்டி டிக்கெட் விற்பனை மே 15 (புதன்கிழமை) தொடங்கும், அதே சமயம் இறுதிப்போட்டிக்கான 1 ஆம் கட்ட ஐபிஎல் போட்டி டிக்கெட் விற்பனை மே 21 (அடுத்த செவ்வாய்) தொடங்கும்.
ஐபிஎல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம். பே.டி.எம் ஆப், பே.டி.எம் இன்சைடர் ஆப் மற்றும் http://www.insider.in தளத்திலும் இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“