IPL 2024 | Ruturaj Gaikwad | Chennai Super Kings: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று புதன்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பஞ்சாப் 17.5 -வது ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது. மேலும், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் அதே 7 வது இடத்தில் உள்ளது. தோல்வி கண்ட சென்னை 10 புள்ளிகளுடன் அதே 4-வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியல் - IPL 2024 points table
ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 ஆட்டங்களில் 8ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் வலுவான நிலையில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அதே 12 புள்ளிகளுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3வது வது இடத்திலும் உள்ளன.
தலா 10 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5வது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 6வது இடத்திலும் உள்ளன. 8 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் 8-வது இடத்திலும், தலா 6 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் 9-வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர்ந்து கடைசி இடத்திலும் உள்ளது.
ஐ.பி.எல் 2024 ஆரஞ்சு தொப்பி - IPL ORANGE CAP 2024
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசி 62 ரன்கள் எடுத்தன் மூலம், இந்த தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார்.
நடப்பு சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 509 ரன்களை எடுத்துள்ளார். 63.62 சராசரி மற்றும் 146.69 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து, 71.43 சராசரி மற்றும் 147.49 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 500 ரன்களை எடுத்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 2வது இடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல் 2024 ஊதா நிற தொப்பி - IPL PURPLE CAP 2024
நடப்பு சீசனில் 10 போட்டிகளில் ஆடி 256 ரன்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டை கைப்பற்றியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகபந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வசம் ஊதா நிற தொப்பி உள்ளது.
அவரைத் தொடர்ந்து, 9 போட்டிகளில் ஆடி 318 ரன்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டை கைப்பற்றியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னணி வேகபந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் 2வது இடத்தில் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.