Advertisment

ஐ.பி.எல் புள்ளிப் பட்டியல்: பிளே ஆஃப் ரேஸில் முந்திய சி.எஸ்.கே; மீண்டும் கீழே தள்ளப்பட்ட மும்பை!

மும்பையை வீழ்த்தியதன் மூலம் சென்னை 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், தோல்வியுற்ற மும்பை இந்தியன்ஸ் 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

author-image
WebDesk
New Update
IPL 2024 points table Orange Cap Purple Cap after MI vs CSK clash Tamil News

ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 ஆட்டங்களில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் அரங்கேறும் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. 

Advertisment

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. இதனைத் துரத்திய மும்பை 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. முடிவில், மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை. இந்த அபார வெற்றியின் மூலம் சென்னை அணி 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், தோல்வியுற்ற மும்பை இந்தியன்ஸ் 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியல் - IPL 2024 points table

ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 ஆட்டங்களில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், 6 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4வது இடத்திலும், 6 புள்ளிகளுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5வது இடத்திலும், 6 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் 6-வது இடத்திலும் உள்ளன. 

4 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் 7 வது இடத்திலும், அதே 4 புள்ளிகளுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 9-வது இடத்திலும், 2 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர்ந்து கடைசி இடத்திலும் உள்ளது. 

ஐ.பி.எல் ஆரஞ்சு தொப்பி 2024 - IPL ORANGE CAP 2024

நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 319    ரன்களை எடுத்தன் மூலம்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வசம் ஆரஞ்சு தொப்பி உள்ளது. 

ஐ.பி.எல் 2024 இல் ஊதா நிற தொப்பி - IPL PURPLE CAP 2024

நடப்பு சீசனில் 6 போட்டிகளில் ஆடி 163 ரன்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹல் வசம் ஊதா நிற தொப்பி உள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment