Advertisment

பும்ராவை முந்திய நட்டு... ஆரஞ்சு, ஊதா தொப்பி யார் வசம் இருக்கு?

நடப்பு சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 63.62 சராசரி மற்றும் 146.69 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 509 ரன்களை எடுத்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
IPL 2024 points table orange cap purple cap after SRH vs RR Tamil News

ஐதராபாத் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Natarajan | Sunrisers Hyderabad | Rajasthan: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (வியாழக்கிழமை) ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

Advertisment

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தோல்வி கண்ட ராஜஸ்தான் அணி அதே 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 

ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியல் - IPL 2024 points table

ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியலைப் பொறுத்தவரையில், தலா 12 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3வது இடத்திலும் உள்ளன. 

தலா 10 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 6வது இடத்திலும் உள்ளன. தலா 8 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் 7வது இடத்திலும் குஜராத் டைட்டன்ஸ் 8-வது இடத்திலும் உள்ளன. தலா 6 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் 9-வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர்ந்து கடைசி இடத்திலும் உள்ளன. 

ஐ.பி.எல் 2024 ஆரஞ்சு தொப்பி  - IPL ORANGE CAP 2024

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசி 62 ரன்கள் எடுத்தன் மூலம், இந்த தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார். 

நடப்பு சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்  கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 63.62 சராசரி மற்றும் 146.69 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 509 ரன்களை எடுத்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். 

அவரைத் தொடர்ந்து, 71.43 சராசரி மற்றும் 147.49 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 500 ரன்களை எடுத்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 2வது இடத்தில் உள்ளார். 

ஐ.பி.எல் 2024 ஊதா நிற தொப்பி - IPL PURPLE CAP 2024

நடப்பு சீசனில் 8 போட்டிகளில் ஆடி 287 ரன்கள் விட்டுக்கொடுத்து 15 விக்கெட்டை கைப்பற்றியிருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் முன்னணி வேகபந்து வீச்சாளர் டி.நடராஜன் வசம் ஊதா நிற தொப்பி உள்ளது. 

அவரைத் தொடர்ந்து,10 போட்டிகளில் ஆடி 256 ரன்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டை கைப்பற்றியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகபந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2வது இடத்தில் உள்ளார்.  

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் நடராஜன் 2 விக்கெட்டை வீழ்த்தி அசத்தி இருந்தார். அவர் 67 ரங்களை குவித்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அணியின் வெற்றிக்கு உதவிக் கொண்டிருந்த ஷிம்ரோன் ஹெட்மியர் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Sunrisers Hyderabad Rajasthan Royals Natarajan IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment