Advertisment

பஞ்சாப், பெங்களூருவுக்கு பெரும் பின்னடைவு; பறிபோன பிளே ஆஃப் வாய்ப்பு - புள்ளி பட்டியல் பாருங்க!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தோல்வி பெங்களூரு அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த அணி அடுத்த சுற்றான பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது.

author-image
WebDesk
New Update
ipl 2024 points table update and orange cap purple cap after PBKS vs GT Tamil News

ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியலைப் பொறுத்தவரை, 7 ஆட்டங்களில் 6 வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெற்றன. 

Advertisment

கொல்கத்தாவில் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கிய 36-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி பெங்களூரு அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த அணி அடுத்த சுற்றான பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது.

இதையடுத்து, இரவு 7:30 மணிக்கு சண்டிகரின் முல்லன்பூரில் நடைபெற்ற 37வது லீக் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியும் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கேள்விகுறியாகி உள்ளது.

ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியல் - IPL 2024 points table

ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியலைப் பொறுத்தவரை, 7 ஆட்டங்களில் 6 வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 7ல் 5 போட்டியை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 5ல் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. 

7 போட்டிகளில் 4ல் வெற்றி, 3ல் தோல்வி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இதேபோல், 7ல் 4 போட்டியை வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. 

அடுத்தபடியாக, 8 போட்டிகளில் 4ல் வெற்றி, 4ல் தோல்வி என 8 புள்ளிகளைப் பெற்று குஜராத் டைட்டன்ஸ் 6-வது இடத்தில் இருக்கிறது. தலா 6 புள்ளிகளிடன் மும்பை இந்தியன்ஸ் 7-வது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 8-வது இடத்திலும் உள்ளன. அதே 4 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் 9-வது இடத்திலும், அதே 2 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர்ந்து கடைசி இடத்திலும் உள்ளது. 

ஐ.பி.எல் ஆரஞ்சு தொப்பி 2024 - IPL ORANGE CAP 2024

நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 379 ரன்களை எடுத்தன் மூலம்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வசம் ஆரஞ்சு தொப்பி உள்ளது. அவருக்கு அடுத்தபடியாக, 6 போட்டிகளில் ஆடியுள்ள டிராவிஸ் ஹெட் 324 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 

ஐ.பி.எல் 2024 இல் ஊதா நிற தொப்பி - IPL PURPLE CAP 2024

நடப்பு சீசனில் 7 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்டை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா (எக்கனாமி ரேட் - 5.98)வசம் ஊதா நிற தொப்பி உள்ளது. இதேபோல், 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹர்ஷல் படேல் (எக்கனாமி ரேட் 9.58) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment