Ravindra Jadeja | Virat Kohli | Rashid Khan | IPL 2024: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17.வது ஐ.பி.எல் சீசனில் புதுமுக வீரர்கள் சாதனைகளை படைத்தும், உடைப்பதுமாக ஒவ்வொரு போட்டிக்கும் சுவாரசியம் குறைவில்லாமல் இருந்து வருகிறது. இதேபோல், மூத்த வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு கம்பேக் கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
ஏப்ரல் 4: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பஞ்சாப்பை மீட்ட சஷாங்க்
6 - அகமதாபாத்தில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி அசத்தலான வெற்றியைப் பெற்றது பஞ்சாப் கிங்ஸ். அந்த அணியை சரிவில் இருந்து மீட்ட அறிமுக வீரர் சஷாங்க் சிங் 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் 200-க்கும் அதிகமான ரன் சேஸிங்கில் மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் விஞ்சியது.
ஏப்ரல் 5: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
அபிஷேக்-கின் அதிரடி
308.33 - சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டர்போசார்ஜ் செய்த அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து 300-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட் பெற்ற முதல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் ஆனார். மேலும், கிறிஸ் கெய்ல் (இரண்டு முறை) மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்குப் பிறகு இன்னிங்ஸில் 300-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டைப் பதிவு செய்த 3வது தொடக்க ஆட்டக்காரரானார் (குறைந்தபட்சம். 30 ரன்கள்) என்கிற பெருமையையும் பெற்றார்.
ஏப்ரல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
8-வது ஐ.பி.எல் சதம் போட்ட கோலி
விராட் கோலி ஜெய்ப்பூரில் 67 பந்துகளில் தனது சதத்தை அடித்து அசத்தினார். 17 சீசன்களில் மிக மெதுவாக ஐ.பி.எல் சதம் இதுவாகும். இருப்பினும், கோலியின் 8-வது ஐ.பி.எல் சதம் மற்றும் 9-வது டி20 சதம் என்ற சாதனையை படைத்துள்ளார். கிறிஸ் கெய்ல் (22), பாபர் அசாம் (11) மட்டுமே டி20 வடிவத்தில் அதிக சதங்களைப் பதிவு செய்துள்ளனர்.
517 ரன்கள் - ஐ.பி.எல்-லில் தனது கடைசி 7 இன்னிங்ஸ்களில் மூன்று சதங்களைப் பதிவு செய்த கோலி, லீக்கில் தொடர்ச்சியாக 7 இன்னிங்ஸ்களில் எந்த ஒரு பேட்டராலும் எடுக்க முடியாத சிறந்த ரன்களை எடுத்து அசத்தியுள்ளார்.
பெங்களூரு அணிக்காக தனது 8வது சதத்துடன், கோலி டி20 போட்டிகளில் ஒரு அணிக்காக அதிக சதம் அடித்த மைக்கேல் கிளிங்கரை (க்ளௌசெஸ்டர்ஷைர் - 7 சதம்) படைத்த சாதனையை முறியடித்தார். மேலும் அதிக சதம் பதிவு செய்த அணிகளில் பெங்களூரு அணி இந்திய அணியுடன் இருந்த சமநிலையை (18) முறியடித்துள்ளது.
110 - ஐ.பி.எல் வரலாற்றில் அதிக கேட்சுகள் பிடித்த சுரேஷ் ரெய்னாவையும் விஞ்சினார் கோலி.
பட்லருக்கு 100/100
6 - ஜோஸ் பட்லர் தனது 6வது ஐ.பி.எல் சதத்தை விளாசினார். ஐ.பி.எல்-லில் இரண்டாவது அதிக சதங்கள் அடித்த கெய்லுடன் சமன் செய்தார். கே.எல்.ராகுலுக்குப் பிறகு 100-வது ஐ.பி.எல் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பட்லர் பெற்றார். சேசிங் போது பல ஐ.பி.எல் சதங்களைப் பெற்ற ஒரே பேட்டர்களாக கோலி மற்றும் பென் ஸ்டோக்ஸுடன் பட்லர் இணைந்துள்ளார்.
ஏப்ரல் 7: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
சாதனை புத்தகத்தில் மும்பை
மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக 234/5 என்ற அபாரமான ஸ்கோரை அடித்து நொறுக்கியது. மும்பையின் மொத்த டி20 அணியின் அதிகபட்ச ஸ்கோர் தனிநபர் அரைசதம் இல்லாமல் (அதிகபட்சம்: 49 - ரோகித் சர்மா) அடிக்கப்பட்டது என்கிற சாதனையைப் படைத்தது.
ரொமாரியோ ஸ்மாஷ்
அன்ரிச் நோர்ட்ஜே வீசிய 20வது ஓவரில் ரொமாரியோ ஷெப்பர்ட் 32 ரன்களை எடுத்தார். ஒரு ஓவரில் மும்பை அணி வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஷெப்பர்ட் 10 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் முடித்தார், அவரது ஸ்டிரைக் ரேட் 390.00 என ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்சம் (குறைந்தது 10 பந்துகள் சந்தித்து) இதுவாகும்.
24.46: ஷெப்பர்ட் மற்றும் டிம் டேவிட் 6 வது விக்கெட்டுக்கு 11 பந்துகளில் 24.46 ரன் விகிதத்துடன் 53 ரன்களை எடுத்து அதிர்ச்சியூட்டும் வகையில் பகிர்ந்து கொண்டனர். இது ஐ.பி.எல்-லில் எந்த 50-க்கும் மேற்பட்ட ஸ்டாண்டிற்கும் அதிகபட்சமாக இருந்தது.
மும்பைக்கு 150, பும்ராவுக்கு 150
மும்பை இந்தியன்ஸ் உலகின் முதல் டி20 அணியாக 150 வெற்றிகளைப் பதிவுசெய்தது. அதே நேரத்தில் ஒரே இடத்தில் (வான்கடே ஸ்டேடியம்) 50 போட்டிகளை வென்ற முதல் ஐ.பி.எல் அணி என்ற பெருமையையும் பெற்றது. இதற்கிடையில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐ.பி.எல்.லில் 150 விக்கெட்டுகளை எட்டினார், லசித் மலிங்கா மற்றும் சுனில் நரைனுக்குப் பிறகு ஒரே அணிக்கான அதிக விக்கெட் எடுத்த மூன்றாவது பந்துவீச்சாளர் ஆனார் பும்ரா.
ஏப்ரல் 7: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
ஓவருக்கு 9 பந்துகள் வீசிய சித்தார்த்
லக்னோ அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த மணிமாறன் சித்தார்த், ஐ.பி.எல் போட்டியில் ஒரு ஓவரில் மூன்று நோ-பால்களை வீசி 9 பந்துகள் வீசிய முதல் சுழற்பந்து வீச்சாளர் ஆனார்.
ஏப்ரல் 8: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ்
ஆல்-ரவுண்டர் சூப்பர் ஸ்டார் ஜடேஜா
சென்னையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சி.எஸ்.கே அணியின் மோதலின் போது ஐ.பி.எல்-லில் 1000 ரன்கள், 100 விக்கெட்டுகள் மற்றும் 100 கேட்சுகள் ஆகிய மூன்றையும் பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றார். சுரேஷ் ரெய்னா, கோலி, கீரன் பொல்லார்ட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்குப் பிறகு ஐ.பி.எல்-லில் 100-கேட்ச் மைல்கல்லை எட்டிய 5வது பீல்டர் ஜடேஜா ஆவார்.
ஏப்ரல் 9: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ்
8 வருட காத்திருப்புக்கு முடிவு கட்டிய புவனேஷ்வர்
புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவானை அற்புதமான ஸ்டம்பிங் செய்தார். எட்டு ஆண்டுகளில் ஐ.பி.எல்-லில் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் முதல் ஸ்டம்பிங் டிஸ்மிஸ் ஆகும். 2013ல் மன்விந்தர் பிஸ்லாவுக்கு எதிராக ஸ்டம்பிங் மூலம் இரண்டு முறை ஆட்டமிழக்கச் செய்த ஒரே சீமர் புவனேஷ்வர் ஆவார்.
பேட்டிங் - பவுலிங் - நிதிஷ்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்ததன் மூலம் அந்த அணிக்காக ஐ.பி.எல் அரைசதம் பதிவு செய்த இரண்டாவது இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். மேலும், அவர் அணி 2 ரன் வித்தியாசத்தில் வெல்லவும் உதவினார். 20 வயதில், நிதிஷ் ஒரு போட்டியில் அரை சதம் அடித்து ஒரு விக்கெட் (1/33) எடுத்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
ஏப்ரல் 10: குஜராத் டைட்டன்ஸ் v ராஜஸ்தான் ராயல்ஸ்
டெத்-ஓவரில் சம்பவம் செய்த ரஷீத்
ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து 197 ரன்களை துரத்திய குஜராத் அணிக்கு கடைசி பந்தில் த்ரில்லான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார் ரஷித் கான். சுவாரஸ்யமாக, டெத் ஓவர்களில் ரஷித் தான் அதிக பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டை (221.97) பெற்றுள்ளார். 2022 சீசன் (குறைந்தது 200 ரன்கள்).
2022 முதல் டெத் ஓவர்களில் ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கான சிறந்த எக்கனாமியை வீதத்தையும் (8.33) ரஷித் பெற்றுள்ளார், மேலும் இந்த காலகட்டத்தில் யுஸ்வேந்திர சாஹலுடன் இணைந்து 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர்.
இவை ஏப்ரல் 10 குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்குப் பிறகு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.