Advertisment

ஐ.பி.எல் 2024 ரிடென்ஷன்: 8 வீரர்களைக் கழட்டிவிட்ட சி.எஸ்.கே; கே.எல். ராகுலை தக்கவைத்த லக்னோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரெட்டோரியஸ், அம்பத்தி ராயுடு உள்ளிட்ட 8 வீரர்களை அணியில் இருந்து விடுவித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணி கேப்டன் கே.எல். ராகுலை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
CSK 1

ஐ.பி.எல் 2024 ரிடென்ஷன்

அனைத்து ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களும் டிசம்பர் 19 ஐ.பி.எல் வீரர்களின் ஏலத்திற்கு முன்னதாக தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, ஐ.பி.எல் 2024 போட்டிக்கு ஐ.பி.எல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்கிறது, எந்தெந்த வீரர்களை விடுவிக்கிறது என்ற ரிடென்ஷன் அறிவிப்பு வெளியானது. 

Advertisment

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, கடந்த ஆண்டு 16.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸை அணியில் இருந்து விடுவித்துள்ளது சி.எஸ்.கே நிர்வாகம். அதே போல, டுவைன் பிரெட்டோரியஸ், அம்பத்தி ராயுடு, சிசாண்டா மகாலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் என மொத்தம் 8 வீரர்களை அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவித்துள்ளது. 

அதே நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, ருதுராஜ், ரஹானே, சாஹர், கான்வே, துபே, தீக்‌ஷனா, சாண்ட்னர், பதிரானா, துஷார், ராஜ்வர்தன், சிமர்ஜீத், ஷாய்க், நிதாந்த், சோலங்கி, அஜய் ஆகியோர் அணியில்  தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி அந்த அணியின் கேப்டன் கே.எல். ராகுலை 2024-ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட் அறிமுகமான முதல் சீசனில் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியதில் கே.எல். ராகுல் முக்கிய பங்கு வகித்துள்ளார். வலது கை பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் ஐ.பி.எல் 2022-ல் 616 ரன்கள் எடுத்தார். 

கடந்த ஆண்டு, ராகுல் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேற்றினார். அதற்கு முன்பு அவர் 274 ரன்கள் எடுத்திருந்தார்.

ஜோ ரூட் 2023-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதன் முதலில் ஐ.பி.எல் போட்டியில் விளையாடினார். இருப்பினும் அவர் ஒரு முறை சாம்பியனுக்காக மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனர் குமார் சங்கக்கார கூறுகையில், இங்லிஷ் தனது காலத்தில் டிரஸ்ஸிங் ரூமில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.

இருப்பினும், 32 வயதான ஜோ ரூட் வரவிருக்கும் ஐ.பி.எல் சீசனில் தான் விளையாடப் போவதில்லை என்று அறிவித்தார்.  “எங்கள் தக்கவைப்பு உரையாடல்களின் போது, ஐபிஎல் 2024-ல் பங்கேற்பதில்லை என்ற தனது முடிவை ஜோ ரூட் எங்களிடம் தெரிவித்தார்” என்று சங்கக்காரா கூறினார். 

முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோ ரூட்டை அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்கு ஏலம் எடுத்தது. 

மேலும், “குறுகிய காலமாக இருந்தாலும்கூட, ஜோ ரூட்டால் அணி உரிமையாளருக்கும் அவரைச் சுற்றியுள்ள வீரர்களுக்கும் சாதகமான தாக்கத்தை உருவாக்க முடிந்தது. அணியைச் சுற்றியுள்ள அவரது ஆற்றலும், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு அவர் கொண்டு வந்த அனுபவத்தையும் விரும்புகிறோம். அவரது முடிவை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம், அவர் செய்யும் எல்லாவற்றிலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்” என்று சங்ககாரா கூறினார். 

இந்தியாவில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன் போட்டியில் பெரும் தோல்வி அடைந்து இங்கிலாந்து அணியும் ஜோ ரூட்டும் ஏமாற்றம் அளித்தனர்.

அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்து அணியை அறிவிக்கும் போது, இங்கிலாண்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் நிர்வாக இயக்குனர் ராப் கீ, ஜோ ரூட்டுக்கு ஓய்வு தேவை என்று கூறினார்.

அணி மாறும் ஷாபாஸ் அஹமது, மயங்க் டாகர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் அஹமத் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு (எஸ்.ஆர்.எச்) அனுப்பட்டுள்ளார். அதே போல, எஸ்.ஆர்.எச் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மயங்க் தாகர் பெங்களூரு அணிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மயங்க் டாகர் ஐ.பி.எல் 2023 சீசனில் எஸ்.ஆர்.எச் அணிக்காக 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு விக்கெட்டை எடுத்தார், ஷபாஸ் தனது 39-போட்டி ஐ.பி.எல் போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், பேட்டிங்கிலும் பங்களித்துள்ளார்.

ஷர்துல் தாகூர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விடுவிப்பு

கொல்கத்தா நைட் ரைடர் அணியால் பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகிய இருவரும் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது: “ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட் வைஸ், என். ஜெகதீசன், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ், டிம் சவுதீ, ஜான்சன் சார்லஸ்.

எஸ்.ஆர்.எச் அணியில் இருந்து ஹாரி புரூக் விடுவிப்பு

ஐ.பி.எல்-க்கு ப்ரூக்கின் வருகை நிறைய உற்சாகத்தை அளித்தது. அவர் ஐ.பி.எல் 2023 சீசன் தொடக்கத்தில் ஒரு சதம் அடித்து கவனம் ஈர்த்தார். ஆனால், ஆட்டத்தில் அவரது நிலைத்தன்மை சரியாக இல்லை. இந்த நிலையில், எஸ்.ஆர்.எச் அணி தற்போது அவரை விடுவித்துள்ளது.

எஸ்.ஆர்.எச் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்: ஹாரி புரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, அகேல் ஹொசைன், அடில் ரஷித் ஆகியோரை எஸ்.ஆர்.எச் அணி விடுவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ipl News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment