/indian-express-tamil/media/media_files/4eMJQ3SFv0Y5XJ9eYGbR.jpg)
IPL 2024 Schedule Announcement - ஐ.பி.எல் 2024 தொடருக்கான அட்டவணை வெளியீடு
IPL 2024 Full Schedule Live Updates: 17வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல் 2024) தொடர் மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. இந்த போட்டியின் அட்டவணை இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2024 Schedule Live Updates
இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய ஐ.பி.எல் தலைவர் அருண் துமால், முதல் 15 நாட்களுக்கு அட்டவணை வெளியிடப்படும் என்று கூறினார்.
முதல் 15 நாட்களுக்கான ஐ.பி.எல் 2024 அட்டவணை:
/indian-express-tamil/media/post_attachments/d5a57519-51d.jpg)
பொதுத்தேர்தல் நடைபெறும் அதே நேரத்தில் லீக் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. 2009 ஆம் ஆண்டில், ஐ.பி.எல் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது. 2014 இல், சீசனின் முதல் 20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மற்றும் மீதமுள்ளவை இந்தியாவில் விளையாடப்பட்டன.
10 அணிகள் மோதும் ஐ.பி.எல் 2024 தொடரில் 5 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் தங்கள் குழுவில் உள்ள மற்ற 4 அணிகளுடன் தலா இரண்டு முறை (சொந்த மைதானத்தில் மற்றும் வெளி மைதானத்தில் ஆட்டம்) மோதும். மற்ற குழுவில் உள்ள 4 அணிகள் ஒரு முறை, மீதமுள்ள அணிகளுடன் இரண்டு முறை மோத உள்ளன.
ஐ.பி.எல் 2024 தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியனான எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
THALA. 🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) February 22, 2024
CHENNAI. 🏟️
YELLOVE. 💛
The Forever Emotion is back! 🥳
🗓️ : March 22, 2024 #SummerOf24pic.twitter.com/7GlIKO1MRm
குஜராத் டைட்டன்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் மார்ச் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. மும்பை இந்தியன்சை கேப்டனாக ஹர்திக் பாண்டியா வழிநடத்த உள்ளார். முந்தைய இரண்டு சீசன்களில் இரண்டு இறுதிப் போட்டிகளுக்கு அவர் வழிநடத்திய அணிக்கு எதிராக மும்பைக்கு வழிநடத்த உள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us