Advertisment

'ஐ.பி.எல் 2024 போட்டிகள் மார்ச் 22 முதல் தொடங்கும்': அருண் துமால் உறுதி

ஐ.பி.எல் 2024 போட்டிகள் மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது என்றும் மக்களவைத் தேர்தல்களுக்கு மத்தியில் இந்தியாவில் முழுமையாக விளையாடப்படும் என்றும், ஐ.பி.எல் நிர்வாக தலைவர் அருண் துமால் உறுதிப்படுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
IPL 2024 set to begin from March 22 confirms chairman Arun Dhumal Tamil News

மக்களவைத் தேர்தல் நடைபெறும் அதே நேரத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024: 17வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல் 2024) தொடர் மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது என்றும், மக்களவைத் தேர்தல்களுக்கு மத்தியில் இந்தியாவில் முழுமையாக விளையாடப்படும் என்றும் ஐ.பி.எல் நிர்வாக தலைவர் அருண் துமால் தெரிவித்தார். 

Advertisment

இது தொடர்பாக அருண் துமால் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், "இந்த சீசன் ஐ.பி.எல் தொடரை மார்ச் 22 ஆம் தேதியில் தொடங்கலாம் என நினைக்கிறோம். மேலும் முதல் 10 நாட்களின் அட்டவணை ஆரம்பத்தில் அறிவிக்கப்படும். மீதமுள்ள ஆட்டங்களுக்கான பட்டியல், மக்களவைத் தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும். 

இப்போதே முழு ஐ.பி.எல் அட்டவணையையும் அறிவிக்கும் சூழ்நிலையில் நாங்கள் இருக்க விரும்பவில்லை. ஏன்னென்றால், குறிப்பிட்ட மைதானத்தில் நடக்கும் போட்டிகளுக்கு பாதுகாப்பை வழங்க பாதுகாப்பு அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் என்று பாதுகாப்பு ஏஜென்சிகள் எங்களுக்குத் தெரிவிக்கின்றன. மேலும், கடைசி நேரத்தில் இடத்தை மாற்றுவதற்கு நிறைய சவால்கள் இருக்கும். 

ஐ.பி.எல் போட்டியைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு போட்டிக்கு பின்னாலும் நிறைய பேர் வேலை செய்கின்றனர். மேலும் ஒவ்வொரு ஐபிஎல் ஆட்டத்தையும் நடத்த அவர்களுக்கு நேரம் தேவை. எனவே திட்டமிடப்பட்ட முதல் சில ஆட்டங்களை மட்டும் இப்போது அறிவிப்போம் என்று நாங்கள் நினைத்தோம். குறிப்பிட்ட தேதிகளில் எந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்பது பற்றிய தெளிவு கிடைத்தவுடன் முழுமையான அட்டவணையை அறிவிப்போம்." என்று அவர் கூறினார். 

மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் மார்ச் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் வேறு நாட்டில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டபோது, ​​“வெளிநாட்டில் அது நடக்காது. அதனால்தான், மக்களவைத் தேர்தல் தேதிகளுக்காக காத்திருக்கிறோம், அதற்கேற்ப இடங்களைத் திட்டமிடுவோம்." என்று ஐ.பி.எல் நிர்வாக தலைவர் அருண் துமால் கூறினார். 

மக்களவைத் தேர்தல் நடைபெறும் அதே நேரத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. 2009 இல், ஐ.பி.எல் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது, 2014 இல், சீசனின் முதல் 20 ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் மற்றவை இந்தியாவிலும் விளையாடப்பட்டன.

2019ல், மக்களவைத் தேர்தல் நடந்த அதே நேரத்தில், ஐ.பி.எல் போட்டிககளும் அரங்கேறின. டி20 உலகக் கோப்பை ஜூன் 1ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மே மாத இறுதியில் ஐ.பி.எல் போட்டிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சீசன்களின் வழக்கம் போல், தொடக்க ஆட்டம் கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2024 set to begin from March 2022, set to be hosted in India despite general elections, confirms league chairman Arun Dhumal

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment