Jake Fraser-McGurk | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் லக்னோ அணி நிர்ணயித்த 168 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணியில் சிறப்பாக ஆடிய ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். அதிரடியாக மட்டையைச் சுழற்றிய அவர் 35 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 55 ரன்கள் எடுத்து அசத்தினர். அவரின் மிரட்டலான ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
தற்போது ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் யார்? அவரது கிரிக்கெட் பின்னணி என்பது குறித்து ஏராளமான ரசிகர்கள் கூகுள் தேடு பொறியில் தேடி வருகிறார்கள். இந்த நிலையில், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் குறித்தும், அவரது கிரிக்கெட் ஆரம்ப காலம் பற்றியும் இங்கு பார்க்கலாம்.
யார் இந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்?
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க். 22 வயதான இவர் ஆஸ்திரேலியாவின் அனைத்து வயதுக்குட்பட்ட அணிகள் சார்பிலும் விளையாடி இருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோர் ஆஸ்திரேலிய அணியிலும் அவர் இடம் பிடித்தார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் தனது ஆரம்பகாலத்தில் வெற்றிகாரமான வீரராகவும் இருந்துள்ளார். ஷீல்ட் மற்றும் மார்ஷ் கோப்பை வென்ற விக்டோரியா அணிக்காக ஆடியுள்ளார். அந்த ஆட்டத்தில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் என்கிற பெருமையைப் பெற்றார்.
எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் திறன் படைத்தவராக அறியப்படும் ஃப்ரேசர்-மெக்குர்க் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்தவர் என்கிற சாதனையை படைத்துள்ளார். அவர் 29 பந்துகளில் சதம் அந்த சாதனையைப் படைத்தார்.
நடப்பு ஐ.பி.எல் தொடருக்காக கடந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடந்த மினி ஏலத்தில் ஃப்ரேசர்-மெக்குர்க் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. ஆனால், காயமடைந்த லுங்கி என்கிடிக்கு மாற்றாக டெல்லி கேபிடல்ஸில் சேரும் வாய்ப்பைப் பெற்றார். அந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர், லக்னோ பந்துவீச்சை தும்சம் செய்தார்.
தனது பேட்டிங் குறித்து ஃப்ரேசர்-மெக்குர்க் பேசுகையில், "கடந்த 5 - 6 ஆட்டங்களில் ஓரங்கட்டப்பட்ட எனக்கு புதிய பயணத்தை மேற்கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆட்டத்தில் பேட்டை அதிகமாக சுற்றாமல் பந்தை நடுப்பகுதியில் கண்டுபிடித்து அடித்தேன். கடந்த 12 மாதங்களாக அதை செய்ய முயற்சித்து வருகிறேன். கவர்ஸ் திசைக்கு மேலே அடித்த ஷாட் எனக்கு பிடித்தது. ஆப் சைடுக்கு மேலே அடிப்பதை விட சிறந்த ஷாட் எதுவுமில்லை.
பவர் -பிளேவுக்கு வெளியே பேட்டிங் செய்ய தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன். இந்தியாவில் இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட்டைப் பற்றிய விஷயத்தில் உலகிலேயே இந்த நாடு வித்தியாசமானதாக இருக்கிறது. இதைப்போல் எங்கும் பார்த்ததில்லை. இதற்கு முன் கேள்விப்பட்ட நான் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன். இன்னும் 8 வாரங்கள் இங்கே இருக்கப்போவது சிறப்பானதாகும்" என்று கூறினார்.
Maiden IPL FIFTY for Jake Fraser-McGurk on DEBUT!
— IndianPremierLeague (@IPL) April 12, 2024
Hat-trick of sixes in this thoroughly entertaining knock 💥💥💥
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #LSGvDC pic.twitter.com/0hXuBkiBr3
Jake Fraser-McGurk's first two scoring shots in the #TATAIPL 🤯#IPLonJioCinema #LSGvDC pic.twitter.com/CjVId53QIq
— JioCinema (@JioCinema) April 12, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.