/indian-express-tamil/media/media_files/2025/03/23/S7GG7WIQo5jufHGF2zcG.jpg)
IPL 2025, CSK vs MI Updates: 18-வது ஐ.பி.எல் 2025 தொடர் கொல்கத்தாவில் நடப்பு சாம்பியன் கே.கே.ஆர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே முதல் போட்டியுடன் தொடங்கியது. இந்த போட்டியில், கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் ஐ.பி.எல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் லைவ் அப்டேட்ஸ்:
இந்த ஐ.பி.எல் தொடரில் இன்று (23.03.2025) 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே இன்று (23.03.2025) இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. இரண்டு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரிக்கில்டன் களமிறங்கினர். ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். சி.எஸ்.கே-வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாத மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் எடுத்தது.
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே அணியில், ரச்சி ரவீந்திரா மற்றும் ராகுல் திரிபாதி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 2வது ஓவரிலேயே ராகுல் திரிபாதி அவுட் ஆனதால், அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த பேட்டர்கள் பெரிய அளவில் ரன் குவிக்காமல் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். கடைசியில் 7வது விக்கெட்டுக்கு தோனி களமிறங்கினார். 2 பந்துகளை மட்டும் சந்தித்து ரன் எதுவும் எடுக்கவில்லை. ரச்சின் ரவீந்திரா சிக்ஸ் அடித்து ஃபினிஷ் செய்தார். சி.எஸ்.கே அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், சி.எஸ்.கே இந்த தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:
ருதுராஜ் கெய்க்வாட், ஆண்ட்ரே சித்தார்த், டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், எம்.எஸ் தோனி, ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கர்ரன், சிவம் துபே, ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:
ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், எம்.எஸ் தோனி(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது.
-
Mar 23, 2025 23:13 IST
கடைசியாக வந்த தோனி... சிக்ஸ் அடித்து ஃபினிஷ் செய்த ரச்சின்... மும்பையை வீழ்த்தி சி.எஸ்.கே வெற்றி!
19வது ஓவரில் 4வது பந்தில் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் ஆனார். அவருக்கு அடுத்து, தோனி களமிறங்கினார். 2 பந்துகளை மட்டுமே தோனி சந்தித்தார். மறுமுனையில் இருந்த ரச்சின் ரவீந்திரா ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம், சி.எஸ்.கே அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரச்சின் ரவீந்திரா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக வந்த தோனி 2 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் எதுவும் எடுக்கவில்லை.
-
Mar 23, 2025 23:01 IST
ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி அரைசதம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி 42 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார்.
-
Mar 23, 2025 22:47 IST
நிதானமாக விளையாடும் ரச்சின் ரவீந்திரா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி வருகிறார். அவருடன் ஜடேஜாவும் விளையாடி வருகிறார். சி.எஸ்.கே 16 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 23, 2025 22:45 IST
வந்த வேகத்தில் நடையைக் கட்டிய தீபக் ஹூடா, சாம் கரன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டர்கள், தீபக் ஹூடா 3, சாம் கரன் 4 ரனகள் எடுத்து விக்னேஷ் புதுர் பந்தில் கேட்ச் ஆகி வந்த வேகத்திலேயே வெளியேறினர்.
-
Mar 23, 2025 22:23 IST
எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றிய சிவம் துபே அவுட்
அதிரடி வீரர் சிவம் துபே சிறப்பாக விளையாடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்களை வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து தீபக் ஹூடா பேட்டிங் செய்ய வந்தார். சி.எஸ்.கே 10.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 23, 2025 22:15 IST
அதிரடி அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் அவுட்
அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் விக்னேஷ் புதூர் பந்தில் வில் ஜேக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, சிவம் துபே பேட்டிங் செய்யவந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. சிவம் துபே - ரச்சின் ரவீந்திரா விளையாடி வருகின்றனர்.
-
Mar 23, 2025 22:08 IST
ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அதிரடி அரைசதம் அடித்தார்.மறு முனையில், ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி வருகிறார்.
-
Mar 23, 2025 21:40 IST
முதல் விக்கெட்டை இழந்த சி.எஸ்.கே... ராகுல் திரிபாதி அவுட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன் எடுத்திருந்தபோது தீபக் சாஹர் வீசிய பந்தில் ராகுல் திரிபாதி அவுட் ஆனார். சி.எஸ்.கே முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து, ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Mar 23, 2025 21:38 IST
ரச்சின் ரவீந்திரா - ரகுல் திரிபாதி ஓபனிங் பேட்டிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா - ரகுல் திரிபாதி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
-
Mar 23, 2025 21:17 IST
சி.எஸ்.கே பந்துவீச்சு தாக்குதலில் சிக்கியது... 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
-
Mar 23, 2025 21:04 IST
மிட்செல் அவுட்
மிட்செல் சாண்ட்னர் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில், நாதன் எல்லிஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து பேட்டிங் செய்ய ட்ரெண்ட் போல்ட் வந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து திணறி வருகிறது.
-
Mar 23, 2025 20:58 IST
அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள்... சி.எஸ்.கே தாக்குதலில் திணறும் மும்பை இந்தியன்ஸ்
அடித்து ஆடிய நமன் தீர் 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில், நூர் அஹமது பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து பேட்டிங் செய்ய தீபக் சாஹர் வந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 17.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து திணறி வருகிறது.
-
Mar 23, 2025 20:53 IST
நன்றாக விளையாடிய திலக் வர்மா அவுட்
மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் நம்பிக்கையுடன் விளையாடிய திலக் வர்மா நூர் அஹமது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து மிட்செல் சாண்ட்னர் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Mar 23, 2025 20:51 IST
3 ரன்களில் நடையைக் கட்டிய ராபின் மின்ஸ்
ராபின் மின்ஸ் 9 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நூர் அஹமது பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து நமன் தீர் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Mar 23, 2025 20:49 IST
சூர்யகுமார் யாதவ்வை ஸ்டம்பிங் செய்த தோனி
சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நூர் அகமது வீசிய பந்தில் கிரீஸுக்கு வெளியே சென்ற சூர்யகுமார் யாதவ்வை தோனி ஸ்டம்பிங் செய்தார். அடுத்து ராபின் மின்ஸ் வந்தார். -
Mar 23, 2025 20:02 IST
அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்; வில் ஜேக்ஸ் அவுட்
வில் ஜேக்ஸ் 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய முதல் ஓவரில் 14 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து, திலக் வர்மா - சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்து வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ள்ளது.
-
Mar 23, 2025 19:45 IST
ரோஹித் சர்மா, ரிக்கெல்டன் விக்கெட்டை வீழ்த்திய கலீல் அகமது சிறப்பான பந்துவீச்சு
முதல் ஓவரில் ரோஹித் சர்மாவை டக் அவுட் ஆக்கிய கலீல் அகமது சிறப்பாக பந்துவீசி, இரண்டாவது ஓவரில் ரிக்கெல்டன் விக்கெட்டை வீழ்த்தினார். 7 பந்துகளில் 13 ரன் எடுத்த ரிக்கெல்டன் போல்ட் அவுட் ஆனார். மும்பை இந்தியன்ஸ் 2.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன் எடுத்துள்ளது. வில் ஜேக்ஸ் - சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகின்றனர்.
-
Mar 23, 2025 19:34 IST
முதல் ஓவரை சூப்பராக வீசிய கலீல் அகமது; ரோஹித் சர்மா டக் அவுட்
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, ரிக்கில்டன் தொடக்க வீரர்களக களமிறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது சிறப்பாக வீசினார். 4வது பந்தில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார்.
-
Mar 23, 2025 19:27 IST
கேப்டன்கள்: ருதுராஜ் கெய்க்வாட் - சூர்யகுமார் யாதவ் கருத்து என்ன?
ருதுராஜ் கெய்க்வாட்: நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். இந்த மைதானத்தில் முதல் முறையாக விளையாடுகிறோம், எனவே அது எப்படி விளையாடும் என்று எங்களுக்கு உண்மையில் தெரியாது. எனவே நாங்கள் அதற்கேற்ப மாறி துரத்த விரும்புகிறோம். பேட்டிங் செய்ய ஒரு நல்ல விக்கெட்டாகத் தெரிகிறது. நூர், எல்லிஸ், ரச்சின் மற்றும் சாம் கரன் ஆகியோர் வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
சூர்யகுமார் யாதவ்: நான் முதலில் பேட்டிங் செய்வதில் நன்றாக உணர்கிறேன். எங்கள் சொந்த ஊரில் ஒரு அழகான முகாம் இருந்தது, நாங்கள் 2-3 நாட்களுக்கு முன்பு இங்கே இருந்தோம். சாதனைகளின் அடிப்படையில் இருவரும் பலமானவர்கள். இது ஒரு நல்ல ஆட்டமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ரிக்கிள்டன், ஜாக்ஸ், சாண்ட்னர் மற்றும் போல்ட் ஆகியோர் நான்கு வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
-
Mar 23, 2025 19:20 IST
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு; மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!
ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான போட்டியில், டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.