/indian-express-tamil/media/media_files/2025/03/24/FmTcSQjfIfgYMMR1LxfI.jpg)
டெல்லி கேபிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 4வது லீக் போட்டி - விசாகப்பட்டினம்
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் சனிக்கிழமை (மார்ச் 22) முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் மார்ச் 24-ம் தேதி இரவு 7:30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பலபரிட்சை நடத்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025 LIVE Cricket Score, DC vs LSG LIVE Score
சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லாத ஐ.பி.எல். தொடரில், தனது பழைய அணிக்கு எதிராக மோத களமாடுகிறார் ரிஷப் பண்ட். லக்னோ அணியை வழிநடத்தும் அவர் டெல்லிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்க நினைப்பார். அதனை முறியடிக்க முன்னாள் லக்னோ கேப்டன் கே.எல் ராகுல் நினைப்பார். அவர் தற்போது டெல்லி அணிக்காக வெறும் பேட்டராக களமிறங்குகிறார். கேப்டன் பொறுப்பை அக்சர் கையாள்வதால், ராகுல் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இதற்கிடையில், காயம் காரணமாக லக்னோ அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் அவதியுற்று வருகிறார்கள். ஆவேஷ் கான், மயங்க் யாதவ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் காயத்தால் தவிக்கிறார்கள். மேலும் மொஹ்சின் கான் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது ஷர்துல் தாக்கூருக்கு ஆடும் லெவனில் இடம் பெறும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்டார். அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எய்டன் மர்க்ரம் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். எய்டன் மர்க்ரம் 15 ரன்னில் விப்ராஜ் நிகம் பந்தில் மிட்செல் ஸ்டார்க் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, வந்த நிகோலஸ் பூரண், மிட்செல் மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்து இருவரும் அதிரடியாக விளையாடினர். மிட்செல் மார்ஷ் - நிகோலஸ் பூரண் இருவருமே அதிரடியாக அரை சதம் அடித்தனர். 36 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த மிட்செல் மார்ஷ், முகேஷ் குமார் பந்தில் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் இடம் கெட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 6 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். அடுத்து டேவிட் மில்லர் பேட்டிங் செய்ய வந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 14.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, 30 பந்துகளில் 75 ரன்கள் அடித்திருந்த நிகொலஸ் பூரண், மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆயுஷ் படோனி 4 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் இடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஷர்துல் தாக்கு ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷாபாஸ் அஹமது 9 ரன்கள் எடுத்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் பந்தில் திரிபுரணாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரவி பிஷ்னோய் 2 பந்துகளை சந்தித்த நிலையில், மிட்செல் பந்தில் போல்ட் ஆகி டக் அவுட் ஆனார். அடுத்து திக்வேஷ் வந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன் மூலம், 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் ஃபாப் டுபிளெசிஸ் களமிறங்கினர். ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 1 ரன்னில் ஷர்துல் தாக்கூர் பந்தில் படோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த அபிஷேக் பொரெல் ஷர்துல் தாக்கூர் பந்தில் நிகோலஸ் பூரணிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்து வந்த சமீர் ரிஸ்வி 4 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் அக்சர் படேல், அடித்து ஆடினாலும், 22 ரன்னில் திக்வேஷ் பந்தில் நிகோலஸ் பூரணிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து, ஃபாப் டுபிளெசிஸ் 29 ரன்னில், ரவி பிஷ்னோய் பந்தில் டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டெல்லி கேபிடல்ஸ் அணி 5.5 ஓவர்களில் 5 விக்க்கெட் இழப்புக்கு 65 ரனகள் எடுத்து திணறியது. ஆனால், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் அஷுதோஷ் ஷர்மா அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 22 பந்துகளில் 3 சிக்ஸ் 1 ஃபோர் என 34 ரன்கள் அடித்த நிலையில், சித்தார்த் பத்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த, விப்ராஜ் நிகம், அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக விளையாடினார்.
டெல்லி கேபிடல்ஸ் அணி 16.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தபோது, 15 பந்தில் 39 ரன்கள் அடித்திருந்த விப்ராஜ் நிகம் திக்வேஷ் சிங் பந்தில் சித்தார்த் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து மிட்செல் ஸ்டார்க் 2 ரன்னில் ரவி பிஷ்னோ பந்தில் அவுட் ஆனார். குல் தீப் யாதவ் 5 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
அதிரடியாக அடித்து ஆடிய அஷுதோஷ் ஷர்மா அரைசதம் அடித்தார். தொடர்ந்து, கடைசி ஓவரில் 3 பந்துகள் மீதம் உள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். டெல்லி கேபிடல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல்-லில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் 5 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 5 போட்டிகளில் டெல்லி 2 போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில் லக்னோ 3 முறை வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள்:
டெல்லி: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கே.எல். ராகுல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் ஷர்மா, மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், டி நடராஜன், (இம்பேக்ட் பிளேயர்: கருண் நாயர்/மோஹித் ஷர்மா).
லக்னோ: அர்ஷின் குல்கர்னி, மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவி பிஷ்னோய், ஷமர் ஜோசப் (இம்பேக்ட் பிளேயர்: ஆகாஷ் சிங்/ஷாபாஸ் அகமது/மணிமாறன்).
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.