/indian-express-tamil/media/media_files/2025/06/03/xXO0VByl7USmioMsC7pp.jpg)
ஐ.பி.எல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ், இறுதிப் போட்டி - லைவ் கிரிக்கெட் ஸ்கோர், நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்.
10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 3-ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது இந்த, இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
தொடர்ந்து 191 ரன் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் புகுந்தனர். இதில் பிரியன்ஷ் ஆர்யா 24 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த இங்கிலிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 39 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து இளம் வீரர்களான நேஹல் வதேரா மற்றும் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் வதேரா 15 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 6 ரன்னிலும், ஓமர்சாய் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்தார். ஆர்.சி.பி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், குருனால் பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
-
Jun 03, 2025 23:32 IST
18 வருட கனவை நனவாக்கிய ஆர்.சி.பி... முதன்முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்று சாதனை
கடுமையாக போராடியும் பஞ்சாப் அணியால் வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக, இறுதி ஓவரில் மட்டும் பஞ்சாப் அணி 22 ரன்களை குவித்தது. பஞ்சாப் வீரர் ஷஷாங்க் சிங் 30 பந்துகளில் 61 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். எனினும், 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றது. மேலும், 18 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக பெங்களூரு மகுடம் சூடியது.
-
Jun 03, 2025 23:21 IST
19 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 162 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் இருந்து ஷஷாங்க் சிங் 39 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்ய போராடி வருகிறார்.
-
Jun 03, 2025 23:17 IST
18 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
யாஷ் தயால் வீசிய இந்த ஓவரில் அஸ்மதுல்லாஹ் ஓமர்சாய் ஆட்டமிழந்தார். இந்நிலையில், 12 பந்துகளில் 41 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களத்தில் உள்ளது. கைல் ஜேமிஸன் மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோர் தற்போது விளையாடுகின்றனர்.
-
Jun 03, 2025 23:13 IST
17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
நேஹல் வதேராவின் விக்கெட்டை புவனேஷ் குமார் வீழ்த்தினார். அதன்படி, 18 பந்துகளில் 15 ரன்களுடன் அவர் பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து, களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவரது விக்கெட்டையும் புவனேஷ் குமார் கைப்பற்றினார். இது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 17 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது, ஷஷாங்க் சிங் மற்றும் அஸ்மதுல்லாஹ் ஓமர்சாய் களத்தில் உள்ளனர்.
-
Jun 03, 2025 23:06 IST
16 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
16 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் குவித்துள்ளது. குறிப்பாக, இந்த ஓவரில் மட்டும் 13 ரன்களை பஞ்சாப் அணி சேர்த்துள்ளது. 24 பந்துகளில் 55 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்துடன் பஞ்சாப் அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.
-
Jun 03, 2025 22:59 IST
15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
15 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் அடித்துள்ளது. பஞ்சாப் வெற்றிக்கு 30 பந்துகளில் 72 ரன்கள் தேவை என்ற நிலை உருவாகி இருக்கிறது. நேஹல் வதேரா 13 ரன்களுடனும், ஷஷாங்க் சிங் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
Jun 03, 2025 22:55 IST
14 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
14 ஓவர்களில் பஞ்சாப் அணி 106 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ஷஷாங்க் சிங் 3 ரன்களுடனும், நேஹல் வதேரா 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு இன்னும் 6 ஓவர்களில் 85 ரன்கள் தேவைப்படுகிறது.
-
Jun 03, 2025 22:46 IST
13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ் இங்கிலிஸ் விக்கெட்டை க்ருனால் பாண்டியா வீழ்த்தினார். இதனால் பஞ்சாப் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது, ஷஷாங்க் சிங் மற்றும் நேஹல் வதேரா களத்தில் இருக்கின்றனர். அதன்படி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 101 ரன்கள் அடித்துள்ளது.
-
Jun 03, 2025 22:42 IST
12 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
12 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் சேர்த்துள்ளது. ஷெபர்ட் வீசிய இந்த ஓவரில் மட்டும் பஞ்சாப் அணி 10 ரன்களை அடித்துள்ளது. 22 பந்துகளில் 39 ரன்களுடன் ஜோஷ் இங்கிலிஸ் களத்தில் இருக்கிறார். நேஹல் வதேரா 2 ரன்களுடன் ஆடி வருகிறார்.
-
Jun 03, 2025 22:37 IST
11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் குவித்துள்ளது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஜோஷ் இங்கிலிஸ் 31 ரன்கள் சேர்த்துள்ளார். 54 பந்துகளில் 103 ரன்கள் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி ஆடி வருகிறது.
-
Jun 03, 2025 22:32 IST
10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
இந்த ஓவரும் பஞ்சாப் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. ஷெபர்ட் வீசிய பந்தில் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்தார். குறிப்பாக, 1 ரன்களுடன் அவர் பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து, ஜோஷ் இங்கிலிஸுடன் நேஹல் வதேரா கைகோர்த்துள்ளார். 10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் சேர்த்துள்ளது.
-
Jun 03, 2025 22:26 IST
9 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
இந்த ஓவரில் பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டை க்ருனால் பாண்டியா வீழ்த்தினார். அந்த வகையில், பிரப்சிம்ரன் சிங் 22 பந்துகளில் 26 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கியுள்ளார். அதன்படி, 9 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் சேர்த்துள்ளது.
-
Jun 03, 2025 22:20 IST
8 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
8 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களை குவித்துள்ளது. அதன்படி, பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 25 ரன்களுடனும், ஜோஷ் இங்கிலிஸ் 9 பந்துகளில் 16 ரன்களும் சேர்த்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
-
Jun 03, 2025 22:16 IST
7 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
7 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஓவரில் பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதன்படி, பிரப்சிம்ரன் சிங் 17 ரன்களுடனும், ஜோஷ் இங்கிலிஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
Jun 03, 2025 22:10 IST
6 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
6 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் சேர்த்துள்ளது. ஜோஷ் இங்கிலிஸ் 8 ரன்களுடனும், பிரப்சிம்ரன் சிங் 15 ரன்களுடனும் இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
-
Jun 03, 2025 22:06 IST
5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஓவரின் கடைசி பந்தில் பிரியான்ஷ் ஆர்யா ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை ஜோஷ் ஹேஸல்வுட் வீழ்த்தினார். அதன்படி, பிரியான்ஷ் ஆர்யா 24 ரன்களுடன் வெளியேறினார். தற்போது, ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
-
Jun 03, 2025 22:00 IST
4 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
4 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஓவரில் பந்து வீசிய புவனேஷ் குமார் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களுடனும், பிரியான்ஷ் ஆர்யா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
Jun 03, 2025 21:58 IST
3 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
3 ஓவர்களில் பஞ்சாப் அணி 28 ரன்களை சேர்த்துள்ளது. இந்த ஓவரை ஜோஷ் ஹேஸல்வுட் வீசினார். இதில், பிரியான்ஷ் ஆர்யா 11 பந்துகளில் 14 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 7 பந்துகளில் 10 ரன்களும் அடித்துள்ளனர்.
-
Jun 03, 2025 21:55 IST
2 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
2 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 23 ரன்கள் அடித்துள்ளது. இந்த ஓவரை யாஷ் தயால் வீசினார். அதன்படி, பிரியான்ஷ் ஆர்யா 8 பந்துகளில் 11 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 4 பந்துகளில் 8 ரன்களும் அடித்துள்ளனர். பஞ்சாப் அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
-
Jun 03, 2025 21:46 IST
முதல் ஓவர் முடிவில் பஞ்சாப் அணி
பஞ்சாப் அணி முதல் ஓவரில் 13 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் இருந்து பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில், பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களும், பிரியான்ஷ் ஆர்யா 7 ரன்களும் அடித்துள்ளனர்.
-
Jun 03, 2025 21:30 IST
அதிரடி காட்டிய ஆர்.சி.பி; பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு
ஆர்.சி.பி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்துள்ளது. குறிப்பாக, அர்ஷ்தீப் சிங் வீசிய இந்த ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அந்த வகையில், 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க இருக்கிறது.
-
Jun 03, 2025 21:19 IST
19 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
19 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி அணியினர் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தனர். அதன்படி, க்ருனால் பாண்டியா 3 பந்துகளில் 3 ரன்களுடனும், ரொமாரியா ஷெபர்ட் 8 பந்துகளில் 17 ரன்களும் குவித்துள்ளனர். அந்த வகையில், ஆர்.சி.பி அணியின் பேட்டிங் முடிவுக்கு வர இருக்கிறது.
-
Jun 03, 2025 21:15 IST
18 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
18 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி அணியினர் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தனர். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஜிதேஷ் ஷர்மாவின் விக்கெட்டை விஜயகுமார் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து க்ருனால் பாண்டியா களமிறங்கியுள்ளார்.
-
Jun 03, 2025 21:06 IST
17 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
17 ஓவர்களில் பெங்களூரு அணியினர் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்துள்ளனர். இந்த ஓவரில் லியம் லிவிங்ஸ்டன் விக்கெட்டை ஜேமிசன் வீழ்த்தினார். இதனால், ரொமாரியோ ஷெபர்ட் தற்போது களமிறங்கியுள்ளார். ஜிதேஷ் ஷர்மா 24 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.
-
Jun 03, 2025 20:56 IST
16 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
16 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி அணியினர் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்துள்ளனர். ஜிதேஷ் ஷர்மா 11 ரன்களுடனும், லியம் லிவிங்க்ஸ்டன் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
Jun 03, 2025 20:51 IST
பெவிலியன் திரும்பிய விராட் கோலி; ஆர்.சி.பி ரசிகர்கள் அதிர்ச்சி
தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த விராட் கோலியின் விக்கெட்டை ஓமர்சாய் அஸ்மதுல்லாஹ் கைப்பற்றினார். இதனால் பெங்களூரு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்படி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களுக்கு ஆர்.சி.பி அணி சேர்த்துள்ளது.
-
Jun 03, 2025 20:35 IST
13 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு வந்த, மயங்க் அகர்வால் 24 ரன்னுக்கு அவுட் ஆனார். சிறிது நேரம் களத்தில் இருந்த கோலியுடன் சேர்ந்து ஆடி 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய கேப்டன் ரஜத் படிதார் எல்.பி.டபிள்யூ அவுட் ஆகி வெளியேறினார்.
தற்போது கோலி - லியாம் லிவிங்ஸ்டோன் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள். 13 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.
-
Jun 03, 2025 20:29 IST
12 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு வந்த, மயங்க் அகர்வால் 24 ரன்னுக்கு அவுட் ஆனார். சிறிது நேரம் களத்தில் இருந்த கோலியுடன் சேர்ந்து ஆடி 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய கேப்டன் ரஜத் படிதார் எல்.பி.டபிள்யூ அவுட் ஆகி வெளியேறினார்.
தற்போது கோலி - லியாம் லிவிங்ஸ்டோன் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள். 12 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
-
Jun 03, 2025 20:27 IST
11 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு வந்த, மயங்க் அகர்வால் 24 ரன்னுக்கு அவுட் ஆனார். சிறிது நேரம் களத்தில் இருந்த கோலியுடன் சேர்ந்து ஆடி 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய கேப்டன் ரஜத் படிதார் எல்.பி.டபிள்யூ அவுட் ஆகி வெளியேறினார்.
தற்போது கோலி - லியாம் லிவிங்ஸ்டோன் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள். 11 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.
-
Jun 03, 2025 20:25 IST
ரஜத் படிதார் அவுட்
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு வந்த, மயங்க் அகர்வால் 24 ரன்னுக்கு அவுட் ஆனார்.
களத்தில் ஆடி வந்த கோலி - ரஜத் படிதார் ஜோடியில், 24 ரன்கள் எடுத்த ரஜத் படிதார் எல்பிடபிள்யூ அவுட் ஆகி வெளியேறினார்.
-
Jun 03, 2025 20:21 IST
10 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு வந்த, மயங்க் அகர்வால் 24 ரன்னுக்கு அவுட் ஆனார்.
தற்போது கோலி - ரஜத் படிதார் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. -
Jun 03, 2025 20:14 IST
9 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு வந்த, மயங்க் அகர்வால் 24 ரன்னுக்கு அவுட் ஆனார்.
தற்போது கோலி - ரஜத் படிதார் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. -
Jun 03, 2025 20:10 IST
8 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு வந்த, மயங்க் அகர்வால் 24 ரன்னுக்கு அவுட் ஆனார்.
தற்போது கோலி - ரஜத் படிதார் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
8 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. -
Jun 03, 2025 20:06 IST
7 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு வந்த, மயங்க் அகர்வால் 24 ரன்னுக்கு அவுட் ஆனார்.
தற்போது கோலி - ரஜத் படிதார் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
7 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. -
Jun 03, 2025 20:05 IST
மயங்க் அகர்வால் அவுட் - தட்டித் தூக்கிய யுஸ்வேந்திர சாஹல்
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். தற்போது கோலி - மயங்க் அகர்வால் ஜோடி களத்தில் ஆடி வந்தார்கள்.
இதில், 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 24 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால் யுஸ்வேந்திர சாஹல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
-
Jun 03, 2025 20:01 IST
பவர் பிளே முடிவில் ஆர்.சி.பி
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். தற்போது கோலி - மயங்க் அகர்வால் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
6 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. -
Jun 03, 2025 19:59 IST
5 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். தற்போது கோலி - மயங்க் அகர்வால் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. -
Jun 03, 2025 19:52 IST
4 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். தற்போது கோலி - மயங்க் அகர்வால் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
4 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. -
Jun 03, 2025 19:49 IST
3 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்த நிலையில் பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
தற்போது கோலி - மயங்க் அகர்வால் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. -
Jun 03, 2025 19:43 IST
பிலிப் சால்ட் அவுட் - கேட்சை லாவகமாக பிடித்த ஷ்ரேயாஸ்!
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்தனர்.
இந்த ஜோடியில் அதிரடி காட்ட முயன்ற பிலிப் சால்ட் 16 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அவர் சுழற்றி அடித்த பந்தில் கேட்சை லாவகமாக பிடித்தார் ஷ்ரேயாஸ்.
2 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்துள்ளது.
-
Jun 03, 2025 19:33 IST
ஆட்டம் இனிதே ஆரம்பம்!
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது. பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - விராட் கோலி ஜோடி களம் புகுந்துள்ளனர்.
-
Jun 03, 2025 19:07 IST
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மதுல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
-
Jun 03, 2025 19:07 IST
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்.
-
Jun 03, 2025 19:03 IST
டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் - பெங்களூரு முதலில் பேட்டிங்
ஐ.பி.எல் 2025 தொடரில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் பஞ்சாப் வென்ற அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், முதலில் பெங்களூரு பேட்டிங் ஆடுகிறது.
-
Jun 03, 2025 18:46 IST
ஆர்.சி.பி ஜெர்சி, ரெட் டர்பனில் கிறிஸ் கெய்ல்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் ஐ.பி.எல் தொடருக்கான இறுதிப் போட்டியில் ஆடும் ஆர்.சி.பி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஆர்.சி.பி ஜெர்சி, ரெட் டர்பன் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் இவ்விரு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
CHRIS GAYLE IN RCB JERSEY AND RED TURBAN. 🫡
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 3, 2025
- The Universe Boss is supporting both RCB and Punjab Kings. pic.twitter.com/MYugZaiL1O -
Jun 03, 2025 18:43 IST
இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்!
பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா
பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார்/யுஸ்வேந்திர சாஹல், விஜய்குமார் வைஷாக்
-
Jun 03, 2025 18:35 IST
மழை குறுக்கிட்டால் ஐபிஎல் கோப்பை யாருக்கு?
பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெறும் நிலையில், மழை காரணமாக இன்று போட்டி நடைபெறவில்லையென்றால் நாளை (ரிசர்வ் டே) போட்டி நடைபெறும். ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் சிறந்த தரவரிசையை பெற்ற பஞ்சாப் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்
-
Jun 03, 2025 18:32 IST
அகமதாபாத்தில் மழை பெய்யுமா?
பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெறும் நிலையில், அங்கு நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதி சுற்று 2 ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் அந்த ஆட்டம் 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இறுதிப்போட்டியின் போதும் மழை அச்சுறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளியான வானிலை அறிக்கையின் படி, அகமதாபாத்தில் மழை பெய்ய வெறும் 5 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 03, 2025 17:31 IST
நேருக்கு நேர்
நடப்பு தொடரில் பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன. முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், அடுத்த 2 ஆட்டங்களில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் 36 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 18-ல் வெற்றி பெற்று இருக்கின்றன.
-
Jun 03, 2025 17:30 IST
பதிலடி கொடுக்குமா பஞ்சாப்?
பஞ்சாப் அணி லீக் சுற்றில் 9 வெற்றியுடன் பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று முதலிடத்தை பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 101 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி 2-வது தகுதி சுற்றில் மும்பையை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் பெங்களுரு அணியை வீழ்த்த கடுமையாக போராடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.