10 அணிகள் களமாடி வரும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, GT vs MI LIVE Cricket Score Online
10 அணிகள் களமாடி வரும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதற்கு முடிவு செய்தது. அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து சாய் சுதர்சன் மற்றும் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இவர்கள் இருவரும் சீராக விளையாடி அணியின் ரன்களை கணிசமாக உயர்த்தினர். அதன்படி, 27 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடுத்த நிலையில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, ஜாஸ் பட்லர், சாய் சுதர்சனுடன் கரம் கோர்த்து விளையானார். அதன்படி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 92 ரன்களை குஜராத் அணி குவித்தது. மேலும், அணியின் ரன்களை அதிரடியாக உயர்த்த சாய் சுதர்சன் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் பெரிதும் உதவியது.
அந்த வகையில், 24 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்த நிலையில், முஜீபூர் ரஹ்மான் பந்துவீச்சில் ஜாஸ் பட்லர் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக, ஷாருக் கான் 9 ரன்களிலும், ருதர்ஃபோர்ட் 18 ரன்களிலும், ரஷீத் கான் 6 ரன்களிலும், சாய் கிஷோர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சனை, ட்ரென்ட் போல்ட் ரன் அவுட்டாக்கினார். அந்த வகையில், 41 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்து சாய் சுதர்சன் பெவிலியன் திரும்பினார். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை குஜராத் அணி குவித்தது.
மும்பை அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், ட்ரென்ட் போல்ட், தீபக் சஹர், முஜீபுர் ரஹ்மான் மற்றும் சத்திய நாராயண ராஜூ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பறினார்கள். இந்நிலையில், 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது.
அந்த வகையில் மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் ரையான் ரிக்டன் ஆகியோர் சிராஜிடம் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். குறிப்பாக, ரோகித் ஷர்மா 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரை போல்டாக்கி சிராஜ் வெளியேற்றினார். ரையான் ரிக்டனும் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்ததாக களமிறங்கிய திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஓரளவிற்கு அணியின் ரன்களை உயர்த்தினார். அதன்படி, திலக் வர்மா, 36 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 39 ரன்கள் சேர்த்தார். மறுபுறம், 28 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 48 ரன்களை சூரியகுமார் யாதவ் குவித்தார். ஆனால், இவர்கள் இருவரும் ப்ரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர்.
இதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ராபின் மின்ஸ் 3 ரன்களுடனும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 11 ரன்களுடன் வந்த வேகத்தில் திரும்பினர். இறுதியாக, நமன் திர், மிட்சேல் இருவரும் 18 ரன்கள் எடுத்த நிலையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சாளர்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் குஜராத் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அதே சமயம் மும்பை அணிக்கு இது இரண்டாவது தோல்வி.
குஜராத் பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ப்ரசித் கிருஷ்ணா ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும், ரபாடா மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.