10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் சனிக்கிழமை (மார்ச் 22) முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் பஞ்சாப் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, GT vs PBKS LIVE Cricket Score
கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐ.பி.எல் கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்துகிறார். அதனால், அவர் மீது மிகுந்து எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரத்தில், அனுபவமும், இளமையும் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணியை சுப்மன் கில் வழிநடத்த இருக்கிறார். இருவரின் தலைமையிலான அணிகளும் வெற்றியுடன் தொடரைத் தொடங்க நினைப்பார்கள். அதனால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அணிகள் இடையேயான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர்.
பிரப்சிம்ரன் சிங் 5 ரன்னில் ரபடா பந்தில் அர்ஷத் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்கு அடுத்து, ஸ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார். பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடிய நிலையில் 47 ரன்கள் எடுத்திருந்தபோது, ரஷித் கான் பந்தில் சாய் சுதர்ஷனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, அஸ்மதுல்லா ஒமர்சாய் பேட்டிங் செய்ய வந்தார்.
ஒமர்சாய் 16 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார். ஆனால், மறுமுனையில், அதிரடியாக அடித்து ஆடிய ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்தார். ஆனால், மறுபுறம், ஸ்டாய்னிஸ் 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து ஷசாங் சிங் களமிறங்கினார்.
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெ இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 42 பந்துகளில் 97 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சஷாங் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 244 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேருக்கு நேர்
குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் ஐ.பி.எல் தொடரில் 5 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 5 போட்டிகளில் குஜராத் 3 முறையும், பஞ்சாப் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில் (கேப்டன் ), ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷாருக் கான், க்ளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்
பஞ்சாப் கிங்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், நேஹால் வதேரா / சூர்யன்ஷ் ஷெக்டே, மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் பிரார், லாக்கி பெர்குசன், அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல்,