தாயகம் திரும்பிய கம்பீர்: மகிழ்ச்சியில் ஷாருக்கான் சொன்ன வார்த்தை; மீண்டும் சாம்பியன் ஆகுமா கே.கே.ஆர்?

கெளதம் கம்பீர் இல்லாத காலத்தில் கொல்கத்தா அணி சந்தித்த சவால்கள் குறித்து பேசிய ராபின் உத்தப்பா, கெளதம் கம்பீர் இல்லாத போது கொல்கத்தா அணி எங்கு போகும் என்று தெரியவில்லை.

author-image
WebDesk
New Update
Gamber Shah rukh

ஷாருக்கான் - கௌதம் கம்பீர்

ஜியோஹாட்ஸ்டாரில், பிரத்தியேகமாக வெளியாகியுள்ள பவர்ப்ளே நிகழ்ச்சியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியின் உரிமையாளர் ஷாருக் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் சொப்ரா, ராபின் உத்தப்பா மற்றும் மன்விந்தர் பிஸ்லா ஆகியோர் 2024 ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் கெளதம் கம்பீரின் மென்டாராக மீண்டும் அணியில் இணைந்துள்ளது குறித்து பேசினர்.

Advertisment

இதனிடையே ஜியோஹாட்ஸ்டாருக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, மீண்டும் வந்த கெளதம் கம்பீரைப் பற்றி ஷாருக்கான நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். "நான் ஒருபோதும் கெளதம் கம்பீர் எங்களை விட்டுச் சென்றதாக நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு உள்ளது. சில வீரர்களுடன் நட்புறவு என்றும் தொடரும், கெளதம் கம்பீர் அத்தகைய நபர்களில் ஒருவர். இது அவர் மீண்டும் தனது பெரிய வீட்டுக்கு திரும்பி வந்துள்ளது போன்ற உணர்வை கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.

கொல்கத்தா அணியின் கட்டமைப்பு பற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா, கெளதம் கம்பீர் மென்டராக திரும்பியுள்ளார். இதற்கு முன்பு அவர் கொல்கத்தா  அணியை உருவாக்கும்போது, 4 முக்கியமான தூண்கள் அந்த அணியை நம்பிக்கையுடன் கட்டி எழுப்ப உறுதியாக இருந்தார். அதில் முதல் தூண் - மிட்செல் ஸ்டார்க்கிடம் உள்ள உறுதி. இரண்டாவது - சுனில் நரைனை ஓப்பனராக முன்னிறுத்தியது. மூன்றாவது - ஷ்ரேயாஸ் ஐயரை மீண்டும் அணியில் இணைத்தது. 4-வது - இளம் வீரர்களில் முன்னுரிமை அளித்தது.

கெளதம் கம்பீர் இல்லாத காலத்தில் கொல்கத்தா அணி சந்தித்த சவால்கள் குறித்து பேசிய ராபின் உத்தப்பா, கெளதம் கம்பீர் இல்லாத போது கொல்கத்தா அணி எங்கு போகும் என்று தெரியவில்லை. ஒரு சிறிய திசைமாறல் இருந்தது. ஒருவேளை அச்சமும் ஏற்பட்டு இருக்கலாம். வெளியிலிருந்து பார்த்தால், அணி எதிர்பார்த்த தரத்தில் செயல்படவில்லை என்பதே தெளிவாக இருந்தது. கெளதம் கம்பீர் திரும்புவதாக நான் கேள்விப்பட்டவுடன், அவரை மீண்டும் அணியில் சேர்ப்பது கொல்கத்தா அணிக்கு, கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று ட்வீட் செய்தேன்.

Advertisment
Advertisements

மென்டராக கெளதம் கம்பீர் - கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர்! இந்த கூட்டணி வெற்றிக்கு எப்படி வழிவகுத்தது என்பது குறித்து பேசிய, ஆகாஷ் சோப்ரா, கெளதம் கம்பீரை ஒரு சிறந்த மென்டராக மாற்ற, அவருக்கு ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற கேப்டன் தேவை. கெளதம் எப்போதும் ஆழமாக ஈடுபட்டு, வீரர்களை தேர்ந்தெடுத்து, அணிக்காக ஒரு தெளிவான திசையை வகுக்கும். அதற்கு பூர்த்தியாக, கேப்டன் குழப்பம் இல்லாமல் செயல்பட வேண்டும். கெளதம் எப்போதும் தீவிரமானவர், ஷ்ரேயாஸ் அமைதியாக இருப்பவர். ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்ததுதான் கொல்கத்தா அணிக்கு வெற்றியைத் தந்தது.

2011-ல் கொல்கத்தா அணிக்கு, கெளதம் கம்பீரை கேப்டனாக கொண்டுவரும் தைரியமான முடிவு குறித்து பேசிய, அஜய் ஜடேஜா, கொல்கத்தா அணி சவுரவ் கங்குலி இடையே உறவுகள் சிறப்பாகச் செயல்படவில்லை. எனவே, 2011-ல் ஒரு பெரிய மாற்றம் நடந்தது. அதற்குமுன், கொல்கத்தா ஒரு விதத்தில் சவுரவ் கங்குலியின் அணியாகவே கருதப்பட்டது. ஆனால் 2011-க்கு பிறகு, அது கெளதம் கம்பீரின் தலைமையில் ஷாருக் கானின் அணியாக மாறியது

கொல்கத்தா பற்றிய தனது முதல் உரையை நினைவுகூர்ந்த மன்விந்தர் பிஸ்லா,2011-ல் கொல்கத்தா வந்த கெளதம் கம்பீரின் முதல் உரையை நினைவுபடுத்திக் கொண்டால், அவர் கூறிய முதல் வார்த்தைகள், ‘நான் உங்கள் இரண்டாவது மகன். இது என் இரண்டாவது வீடு. நான் ‘தாதா’ (சவுரவ் கங்குலி) வை மாற்ற வரவில்லை. நான் என் பெயரை உருவாக்க வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக கோப்பை வென்றிருக்காத கொல்கத்தா, வரவிருக்கும் காலங்களில் நீங்கள் வெற்றியை அனுபவிப்பதை உறுதி செய்யப்போகிறேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஜியோஹாட்ஸ்டார், பவர்ப்ளே நிகழ்ச்சியில், ஷாருக் கான், ஆகாஷ் சோப்ரா, ராபின் உத்தப்பா, அஜய் ஜடேஜா மற்றும் பலர் பங்கேற்ற இந்நிகழ்ச்சி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Shah Rukh Khan Kolkata Knight Riders Gautam Gambhir

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: