/indian-express-tamil/media/media_files/2025/03/22/Z3glF3NA2te6l9Z0nqLH.jpg)
ஐ.பி.எல். 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, முதல் போட்டி, லைவ் கிரிக்கெட் ஸ்கோர்
IPL 2025, KKR vs RCB Live Cricket Score Updates: 10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் இன்று சனிக்கிழமை (மார்ச் 22) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025 LIVE Cricket Score, KKR vs RCB LIVE Score
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் குயிண்டன் டீகாக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் டீகாக் 4 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த கேப்டன் ரஹானே, நரைனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
ஒரு பக்கததில் ரஹானே அதிரடியாக விளையாடினாலும், மறுமுனையில் நரைன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையெ ரஹானே 27 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், நரைன் அதிரடியாக விளையாட தொடங்கினார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய நரைன் 44 ரன்களில் (26 பந்து 5 பவுண்டரி 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய 6 ரன்களில் வெளியேறினார்.
அரைசதம் கடந்த கேப்டன் ரஹானே, 31 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரகுவன்ஷி ஒரு பக்ககம் போராட, மறுமுனையில், ரிங்கு சிங் 12, ரஸல் 4, ரானா 5 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சற்று அதிரடியாக விளையாடிய ரகுவன்ஷி 22 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிடில் ஆர்டரில் பெங்களூர் அணியின் பந்துவீச்சு கூட்டணி சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது. பெங்களூர் அணி தரப்பில் குணால் பாண்டியா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும், சுயாஷ், தயாள், ரஷிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியில் பில் சால்ட் – விராட் கோலி தொடக்க வீரர்களாக களமறங்கினர். இதில் பில் சால்ட் ஒரு பக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில், விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பெங்களூர் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவர்களில் 95 ரன்கள் சேர்த்த நிலையில் சால்ட் ஆட்டமிழந்தார்.
அரைசதம் கடந்த அவர், 31 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த தேவ் தத்படிக்கல் 10 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ரஜத் படிதார் களமிறங்கினார். இதனிடையே, நிதானத்தை கைவிட்டு அதிரடிக்கு மாறிய விராட்கோலி அரைசதம் கடந்து அசத்தினார். வந்த வேகத்தில் சிக்சர் பவுண்டரி பறக்கவிட்ட படித்தார் 16 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 5 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 15 ரன்கள் எடுக்க, பெங்களூர் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 18-வது ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியை பெரிய வெற்றியுடன் தொடங்கியுள்ளது. விராட் கோலி 36 பந்துகளில் 4 பவுணடரி 3 சிக்சருடன் 59 ரன்கள், லிவிங்ஸ்டன் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணியில், நரைன், வருண், அரோரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
-
Mar 22, 2025 22:48 IST
விராட்கோலி அதிரடி அரைசதம்: பெங்களூர் அணிக்கு முதல் வெற்றி
5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 5 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சர் அடிக்க, பெங்களூர் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 18-வது ஐபிஎல் தொடரின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
-
Mar 22, 2025 22:41 IST
கேப்டன் படிதார் அவுட்
4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் படிதார், அதிரடியாக ஆடி ரன்கள் குவித்த நிலையில், 16 பந்துகளில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பெங்களூர் அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 27 பந்துகளில் 13 ரன்கள் தேவை.
-
Mar 22, 2025 22:35 IST
விராட் கோலி அதிரடி அரைசதம்
தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியில் அசத்தி வரும் விராட் கோலி, அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். பெங்களூர் அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது
-
Mar 22, 2025 22:11 IST
பில் சால்ட் அவுட்: பெங்களூர் அணி 95/1
அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த பில் சால்ட் 31 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து தேவ்தத் படிக்கல் களமிறங்கியுள்ளார்.
-
Mar 22, 2025 22:05 IST
பில் சால்ட் 25 பந்துகளில், அரைசதம்
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 25 பந்துகளில், அரைசதம் கடந்து அசத்தினார். பெங்களூர் அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 22, 2025 21:48 IST
சால்ட் - கோலி அதிரடி: பெங்களூர் அணி ரன் குவிப்பு
175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியில், தொடக்க வீரர் பில் சால்ட் விராட் கோலி ஜோடி அதிரடியாக விளையா ரன்கள் குவித்து வருகிறது. 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்துள்ளது. சால்ட் 44 ரன்களும், விராட் 12 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
-
Mar 22, 2025 21:26 IST
மிடில் ஆர்டர் பந்துவீச்சில் அசத்திய பெங்களூர்: கொல்கத்தா அணி 174 ரன்கள் குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் குயிண்டன் டீகாக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் டீகாக் 4 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த கேப்டன் ரஹானே, நரைனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
ஒரு பக்கததில் ரஹானே அதிரடியாக விளையாடினாலும், மறுமுனையில் நரைன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையெ ரஹானே 27 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், நரைன் அதிரடியாக விளையாட தொடங்கினார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய நரைன் 44 ரன்களில் (26 பந்து 5 பவுண்டரி 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய 6 ரன்களில் வெளியேறினார்.
அரைசதம் கடந்த கேப்டன் ரஹானே, 31 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரகுவன்ஷி ஒரு பக்ககம் போராட, மறுமுனையில், ரிங்கு சிங் 12, ரஸல் 4, ரானா 5 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சற்று அதிரடியாக விளையாடிய ரகுவன்ஷி 22 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிடில் ஆர்டரில் பெங்களூர் அணியின் பந்துவீச்சு கூட்டணி சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது. பெங்களூர் அணி தரப்பில் குணால் பாண்டியா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும், சுயாஷ், தயாள், ரஷிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 175 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்க உள்ளது.
-
Mar 22, 2025 21:17 IST
மிடில் ஆர்டரில் டஃப் கொடுத்த பெங்களூர்: கொல்கத்தா அணி 174 ரன்கள் குவிப்பு
தொடக்கத்தில் அதிரடியாக ஆடடத்தை தொடங்கினாலும் மிடில் ஆர்டரில் கொல்கத்தா அணியின் பேட்டிங்கை பெங்களூர் அணி கட்டுப்படுத்தியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து 175 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்க உள்ளது.
-
Mar 22, 2025 20:52 IST
வந்த வேகத்தில் திரும்பிய ரஸல்
ரிங்கு சிங் அவுட் ஆன பிறகு 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஆந்த்ரே ரஸல், ஒரு பவுண்டரி அடித்த நிலையில், சுயாஸ் சர்மா பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். 15.4 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 22, 2025 20:49 IST
ரிங்கு சிங் அவுட்: கொல்கத்தா 145/5
6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரிங்கு சிங் 10 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குணால் பாண்டிய வீசிய 15-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது கொல்கத்தா அணி 15 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
-
Mar 22, 2025 20:40 IST
அடுத்தடுத்து விக்கெட்: மீண்டு வரும் பெங்களூர் அணி
11 மற்றும் 13-வது ஓவரை வீரிய குணால் பாண்டியா, அரைசதம் கடந்த ரஹானே (56), வெங்கடேஷ் அய்யர் (6) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 13 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ரகுவன்சி 15 ரன்களுடனும், ரிங்கு சிங், 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
Mar 22, 2025 20:26 IST
அரைசதத்தை நெருங்கிய நரைன் அவுட்
தொடக்கத்தில் நிதானமாக ஆடிய சுனில் நரைன் போக போக அதிரடியாக விளையாடிய நிலையில், 26 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 10 ஓவர்களில 107 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. ரஹானே 56 ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில், வெங்கடேஷ் அய்யர் 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கியுள்ளார்.
-
Mar 22, 2025 20:18 IST
கேப்டன் ரஹானே அதிரடி அரைசதம்
தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் ரஹானே, 26 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சருடன் அரைசதம் கடந்து அசத்தினார். கொல்கத்தா அணி 8.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 54, நரைன் 22
-
Mar 22, 2025 20:00 IST
அதிரடியில் அசத்தும் ரஹானே
முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர் குயிண்டன் டீகாக 4 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த ரஹானெ அதிரடியாக விளையாடி வருகிறார். தற்போது கொல்கத்தா அணி 6 ஓவர் 60 ரன்கள் 1 விக்கெட்: ரஹானே 39, நரைன் 17
-
Mar 22, 2025 19:20 IST
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பந்துவீச முடிவு
இந்த போட்டியில் டிவுடாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பந்துவீச மு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தொடங்க உள்ளது.
-
Mar 22, 2025 18:30 IST
தொடக்க விழா தொடக்கம்
ஐ.பி.எல். 2025 தொடக்க விழா இனிதே தொடங்கி நடக்கிறது. பாடகி ஸ்ரேயா கோஷல் தனது பன்மொழி நிகழ்ச்சியுடன் விழாவைத் தொடங்குகிறார்.
-
Mar 22, 2025 18:03 IST
ஐ.பி.எல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
1. குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்)
2. சுனில் நரைன்
3. அஜிங்க்யா ரஹானே (கேப்டன்)
4.வெங்கடேஷ் ஐயர்
5. ரிங்கு சிங்
6. ஆண்ட்ரூ ரஸ்ஸல்
7.ரமந்தீப் சிங்
8. ஹர்ஷித் ராணா
9. வைபவ் அரோரா
10. ஸ்பென்சர் ஜான்சன்
11. வருண் சக்ரவர்த்தி
12. இம்பேக்ட் பிளேயர் - ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி/லுவ்னித் சிசோடியா. -
Mar 22, 2025 17:54 IST
ஐ.பி.எல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
1. விராட் கோலி
2. பில் சால்ட்
3. ரஜத் படிதார் (கேப்டன்)
4. லியாம் லிவிங்ஸ்டோன்
5. க்ருனால் பாண்டியா
6. ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்)
7. டிம் டேவிட்
8. ரசிக் தர்/மனோஜ் பந்தகே
9. புவனேஷ்வர் குமார்
10. ஜோஷ் ஹேசில்வுட்
11. யாஷ் தயாள்
12. இம்பேக்ட் பிளேயர் - ஸ்வப்னில் சிங்/சுயாஷ் சர்மா. -
Mar 22, 2025 17:21 IST
கொல்கத்தா அணி எப்படி?
நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, புதிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையில் தங்கள் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள நினைக்கும். அதனைக் கருத்தில் கொண்டு அந்த அணி மிகக் குறைந்த அளவில் மாற்றங்களைச் செய்துள்ளது. விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் சேர்க்கப்பட்டதன் மூலம் டாப்-ஆர்டர் பலப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடி வீரர் சுனில் நரைனுடன் டாப்-ஆர்டரில் உள்ளனர். எனவே, இந்த இரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
-
Mar 22, 2025 16:39 IST
பெங்களூரு அணி எப்படி?
2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி அதன் 18-வது வயதை எட்டியிருக்கும் சூழலில், பெங்களூரு அணி அதன் கோப்பைக்கான தேடலை தொடர்ந்துள்ளது. 'ஈ சாலா கப் நம்தே' என்ற முழக்கத்தை எங்கும் உச்சரிக்க வேண்டாம் என்று விராட் கோலி ஏ.பி டிவில்லியர்ஸை எச்சரித்து இருக்கும் நிலையில், அந்த அணியின் ரசிகர்கள் தொடர்ந்து முழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கான விடிவுகாலம் இந்த ஆண்டிலாவது பிறக்குமா என்றும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில், அனுபவ வீரர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருடன் இணைந்து தங்களது வேகப்பந்து வீச்சு தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது. மேலும், தரமான மற்றும் கணிக்க முடியாத வீரர்களை மிடில்-ஆடரில் வைத்திருக்கிறது. கோலி, பில் சால்ட் மற்றும் கேப்டன் ரஜத் பட்டிதர் ஆகியோர் டாப்-ஆர்டரில் களமாடி அணிக்கு தேவையான ரன்களை குவிக்கலாம்.
-
Mar 22, 2025 16:37 IST
ஐ.பி.எல் 2025 - சூப்பர் ஓவர் போடுவதில் புதிய விதி
ஐ.பி.எல் போட்டிகளில் சூப்பர் ஓவர்களுக்கு அதிகபட்சம் 1 மணி நேரம் வழங்கப்படும் என புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்குள் எத்தனை சூப்பர் ஓவர்கள் வேண்டுமானாலும் விளையாடிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
போட்டி டை ஆன 10 நிமிடத்திற்குள் முதல் சூப்பர் ஓவர் தொடங்கும். அதுவும் டை ஆகும் பட்சத்தில் அடுத்த 5 நிமிடத்தில் அடுத்த சூப்பர் ஓவர் தொடங்கும். நேரக் கட்டுப்பாட்டை பொறுத்து, எது கடைசி சூப்பர் ஓவராக இருக்கும் என கள நடுவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
Mar 22, 2025 16:21 IST
68% மழை பெய்ய வாய்ப்பு
கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதும் இன்றைய போட்டியின் போது மழை குறுக்கீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மழைப்பொழிவுக்கு 68% வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 22, 2025 16:20 IST
7 மணிக்கு டாஸ்
ஐ.பி.எல். 2025 தொடரில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் தொடக்க ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் அரங்கேறுகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு போடப்படும்
-
Mar 22, 2025 16:19 IST
கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதல்
ஐ.பி.எல். 2025 தொடரில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் தொடக்க ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடக்க விழாவுடன் அரங்கேறுகிறது.
-
Mar 22, 2025 16:17 IST
'தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணையப் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐ.பி.எல். 2025 தொடரில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் தொடக்க ஆட்டம் குறித்து உடனுக்குடன் அறிய 'தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணையப் பக்கத்துடன் இணைப்பில் இருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.